தமிழ்த்திமிர்

வேலை தவிர்த்து
வேங்கை நீ அழைப்பாயென தவித்தேன்,
வேற்றுநிலை விளங்கவில்லை,
வேண்டுதலோ,விரதமோ,
வேண்டாமென விடைபெறலோ,
வேடிக்கை விதியிதுவோ,
வேதனை,வெல்ல நினைத்தாய்,
வேண்டாமென சென்றாய்

சாதுர்யமோ,சாணக்கியமோ,
சங்கடமொன்றுமில்லை,சங்கதியறியதாலோ
சறுக்கலிந்த சாமி புலவனுக்கோ,
சாந்தி சாந்தி தெரியாதவனுக்கோ,
சங்கென சரணம் பாடலாமிங்கோ,
சர்வம் சரளம் புரிஞ்சுக்கோ,
சந்தம் தந்தது சூழல்-நன்றி அம்மோ,
சரித்திரம் பொறுத்து பார்ப்போம்-எழுதியதாலோ

அழைத்தாய் அறிந்ததே,அதெப்படியெனில் சொல்வேன்,
அமுதத்தமிழறிந்தவன் அனைத்தும் அறிவான்,
ஆதாரமின்றி அளக்கேன்,
அறிஞரிடம் ஆய்வு செய்,
அடி மைய அரசே ஆவண செய்,
ஆற்றலழியாது தமிழுக்கு போதனை செய்.

எழுதியவர் : ஜே.பெலிக்ஸ் ஜேசுதாஸ் (4-Jul-19, 8:12 am)
சேர்த்தது : Felix Jesudoss
பார்வை : 105

மேலே