தில்லு முல்லு மனிதர்கள்

உறவாக வருவோர் எல்லாம்
உண்மையாக இருப்பதில்லை
உரிமையென்று வருவோர் எல்லாம் உதவியாக இருப்பதில்லை ....///

உள்ளதை உள்ளபடி உரைப்பதில்லை
உறவாடிக் கெடுப்போரும் குறைவதில்லை
குறை கூற நிறையவே உண்டு
சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் இல்லை......///

நெருங்கிப் பழகியே நிறைப்பான்
அவன் சட்டப் பைகளை
நல்லவனாகவே நடிப்பான் பிறர் மத்தியிலே
திருட்டுக் கூட்டங்கள் கை கோர்த்த பின்னே
திருத்தி எடுக்க முடியாது....///

அடித்துச் சொல்லி முறைத்துச் சொல்லி
திருட்டை மறைக்க எத்தனையோ
கதைகள் சொல்லி முடிப்பான்
ஏமாற்றியே வாழ்க்கையைக் கடப்பான்
தில்லு முள்ளு வேலை செய்யும் வழியையே
தேடிப் பிடிப்பான்....///

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (4-Jul-19, 8:01 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 92

மேலே