இன்னும் அஞ்சுவருசம்

டிஜிட்டல் டிஜிட்டல் னு
சொல்லியே ஊரெல்லாம் செதசாச்சு,
பதினைந்து லட்சரூபா ஆச காட்டி
பிரதமர் வேஷம் பாரமாச்சு,
கறுப்புப்பணம் ஒழிகிறேன்னு
காகிதம் தான் கலர் ஆச்சு,
கார்பொரேட் கூட்டுவச்சு
கருவறுத்து முழுங்கியாச்சு,
பசுமை புரட்சி பாரதமுன்னு
விவசாயி வயித்துல அடிச்சாச்சு,
ஏர்முனையா ஓடிச்சுப்புட்டு
ஏரோபிளான் தான் பறந்தாச்சு,
சும்மாதானே இருக்கோம்னு
பெட்ரோல் விலை ஏத்தியாச்சு,
செருப்புகழட்டி போட்டாக்கூட
ஜி ஸ் டி அமலாச்சு,
நீமட்டும் படிக்காதேன்னு
நீட்டு வச்சு முடிச்சாச்சு,
வங்கிக்கடன் வாங்கியவன
வழியனுப்பியும் வச்சாச்சு,
வழியத்து போனவன்கிட்ட
வட்டி மேல வட்டி வச்சு வதைச்சாச்சு,
மீத்தேனு நாதேனு
நெடுவாசலை முடக்கியாச்சு,
கதிர்வெளஞ்ச பாவமுனு
கதிரா மங்கலத்தை கரச்சாச்சு,
ஸ்டெர்ட் லைட் மூடச்சொன்ன
செத்துப்போன்னு சுட்டாச்சு,
பொம்பள புள்ளய பாதுகாக்குறேனு
பொள்ளாச்சியும் போராட்ச்சி,
அண்ணா அண்ணா கெஞ்சினாலும்
அம்மணந்தான் ஆசையாச்சு,
கொஞ்ச வேண்டிய பிஞ்சுகளை (ஆஷிபா , ரிதன்யஶ்ரீ)
பிட்சு பிச்சு புதைச்சாச்சு,
அஞ்சி அஞ்சி வாழவே
அடியாட்கள் கூட்டாச்சு,
மெரினா எங்க மூலுமோனு
மெல்ல மெல்ல முடக்கியாச்சு,
கஜாவுக்கும் ஓகிக்கும்
கைவிரிப்பு செஞ்சாச்சு,
கடற்கரைய கல்லாறையாக்கி
கட்டடமும் கட்டியாச்சு,
காமத்துக்கும் மோகத்துக்கும்
காவல்துறையே காவலாச்சு,
சர்ஜிக்கல் ஸ்டிரைக் சர்ஜிக்கல் ஸ்டிரைக் னு
சகலமும் தனத்தாச்சு,
சட்டமும் பட்டமும்
சட்டபை காசாச்சு,
சட்டசபை ஏறனுனா
சாதீ தான் மொழியாச்சு,
சல்லிக்காசு இல்லாகூட
சாராயம் வரவாச்சு,
முப்படை வைத்துக்கொண்டு
மீனவனை தள்ளியாச்சு,
அரசுப்பணி ஏதுவென்றா
அம்மன்காசு லஞ்சமாச்சு,
ஆட்சியாளர் முறையிட்டா
தீயிட்டு கருக்கியாச்சு,
இராதீ ஏது மூண்டா
ராணுவமும் வாடகையாச்சு,
தலகவசம் வியாபாரமாக
கர்ப்பிணியும் பலியாச்சு,
மேடுன் இந்தியானு சொல்லி
படேல் சிலையும் சீனப் பொருளாச்சு,
வாய்திறந்து வஞ்சிக்க
ஆண்டிஇண்டியன் முத்திரயாச்சு,
இத்தனையும் செஞ்சுபுட்டு
என்கிட்டயே வந்து நின்னான்
இரவல் கேட்டு இன்னும்
அஞ்சுவருசம் ஆளனுமுனு !

எழுதியவர் : ச. சோலைராஜ் (4-Jul-19, 7:52 am)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 64

மேலே