ஆண்டவர் கையில் தான்

ஆண்டவரே உம் கையில் !
யாரிடம் உன்கோரிக்கை
மடையனே மக்கள் தான்
உன் குறிக்கோளா ?
விரல் விட்டு எண்ணுகிறாய்
இரகக்க மனமில்லாமல்,
இது தான் லட்சியமோ ?
மட்டக்களப்பு வை இப்படி
மட்டுப்படுத்தி விட்டாயே !
ஆமென் சொல்லுவதுற்குள்
எங்களை அலங்கோல படுத்திவிட்டாயே !
சிறுபிள்ளை என்றும் பாராமல்
இப்படி சிதைத்துவிட்டாயேடா ?
மூடனே நீயும் மாண்டுதானே
போயிருப்பாய் ?
அமைதிவேண்டி போனோம்
ஆலயத்தினுள்ளே அடக்கம் செய்துவிட்டாயேடா மூடனே ?
ஒருவருக்கொருவர் அன்பு
செலுத்தும் நேரம் எங்களை
அலற விட்டாயேடா பாவி ?
நிச்சயம் உன்னையும் எம்
ஆண்டவர் மன்னிப்பாராக,
உண்மை அவர் கண் முன்னே !
உன் தலைவன் அகப்படுவான்
நீ மன்னிக்கப்பட்டால் அவர் முன் !
நீ கோழை தான்
உறுதிசெய்தாய் பெண்வேடமிட்டு,
யாரிடம் நீ கேட்க வேண்டும்
என யறியாத பேதைதான்,
பைக்குள் கொண்டுவந்து
எங்களை பரலோகம்
அனுப்பிய பாவி நீயே ?
மாண்டது என்னுறவுகள் தான்
மீட்பதும் உனை
கருவருபதும் எம்
ஆண்டவர் கையில் தான் !

எழுதியவர் : ச. சோலைராஜ் (4-Jul-19, 7:51 am)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 47

மேலே