நாகரிக ஆப்பு

நாளும் நடக்கும் கூத்துக்குத்தான்
நாகரீகமுன்னு பேருவச்சான்,
அன்றாடம் சோறுக்கு வழியில்ல
ஆண்ட்ராய்டு வந்ததால ,
அண்டர்வேர் வழியில்ல
ஐஒஸ் வந்ததால,
அஞ்சு பத்து வழியில்ல
ஐபில் வந்ததால,
பார்த்து பேச முடியவில்ல
பேஸ் புக் வந்ததால,
இன்னல் தீர்க்க வழியில்ல
இன்ஸ்டா கிராம் வந்ததால,
துணையாக யாருமில்ல,
ட்விட்டர் வந்ததால,
திருந்தி வாழ வழியில்ல
டிக் டாக் வந்ததால,
வாழ்த்து சொல்ல நேரமில்ல
வாட்'ஸ் ஆப் வந்ததால,
நானும் ஒருவன்தான்
மேற்சொன்ன நாகரிகத்தின்
ஆப் அதனை அள்ளியவன்
நாகரீகத்திலேயே மூழ்கியவன் !
நாளும் நாலும் பெருகுது ஆப்
அது நாமே நமக்கு வைக்கும் ஆப்பு !
--------------------------------------

எழுதியவர் : ச. சோலைராஜ் (4-Jul-19, 7:50 am)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 171

மேலே