Felix Jesudoss - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/eyfuc_47168.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Felix Jesudoss |
இடம் | : Chengalpattu |
பிறந்த தேதி | : 08-Feb-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 9 |
கனவுகளை தேடி சதா அலைந்துக் கொண்டிருக்கும் நாடோடி நான்..
பிராத்திக்கிறேன் நம் புருவங்கள்
ஒட்டிப்பிரியாமல் புதுக்கவிதை பேச,
விழைகிறேன் நம் விரல்கள்
சேர்ந்தால் பிரியாதாவென பேச,
இதயத்தை இடம் மாற்றி மாற்றி
மெளனத்தை மொழிபெயர்க்கிறாய்,
பயணத்தை தடம் மாற்றி மாற்றி
கடற்கரை குதிரையாக்குகிறாய்.
உன் உள்ளங்கையை
என் உலகமாக்கி
உவகையில் உலவச் செய்கிறாய்,
என் சிந்தையை
உன் சொந்தமாக்கி
சங்கில் முத்தெனச்சிறை வைக்கிறாய்.
மேகம் நீ
மழைத்தூரல் நான்
ஒன்றன்று ஒன்றில்லை,
நீயானாலும் நானாலும்
நாம்தான் வேறில்லை.
மெல்லச்சிரி என் மென் பொறி.
வேலை தவிர்த்து
வேங்கை நீ அழைப்பாயென தவித்தேன்,
வேற்றுநிலை விளங்கவில்லை,
வேண்டுதலோ,விரதமோ,
வேண்டாமென விடைபெறலோ,
வேடிக்கை விதியிதுவோ,
வேதனை,வெல்ல நினைத்தாய்,
வேண்டாமென சென்றாய்
சாதுர்யமோ,சாணக்கியமோ,
சங்கடமொன்றுமில்லை,சங்கதியறியதாலோ
சறுக்கலிந்த சாமி புலவனுக்கோ,
சாந்தி சாந்தி தெரியாதவனுக்கோ,
சங்கென சரணம் பாடலாமிங்கோ,
சர்வம் சரளம் புரிஞ்சுக்கோ,
சந்தம் தந்தது சூழல்-நன்றி அம்மோ,
சரித்திரம் பொறுத்து பார்ப்போம்-எழுதியதாலோ
அழைத்தாய் அறிந்ததே,அதெப்படியெனில் சொல்வேன்,
அமுதத்தமிழறிந்தவன் அனைத்தும் அறிவான்,
ஆதாரமின்றி அளக்கேன்,
அறிஞரிடம் ஆய்வு செய்,
அடி மைய அரசே ஆவண செய்,
ஆற்றலழியாத
பனையொலை மாளிகையில்,
பழஞ்சோறு நீயூட்ட
பச்சமொளகா நாங்கடிக்க,
போதுமென நானும்
போதாதென நீயும்
போடும் சண்டையில்,
மாமர மஞ்சம் மயங்கா கிளிகள்,
மயங்கும் மாகாதல் வெள்ளத்தில்.
கன்னுக்குட்டி உன் சேல கடிக்க,
பூனக்குட்டி உம்முந்தான இழுக்க,
நா வேணுமா, அவன் வேணுமா
பஞ்சாயத்து, எமை பட்டினியில் தள்ளும். மா
மாவென கொஞ்சி, கெஞ்சி முடியும்,
காதல் கோகில முத்து மிளிரும்.
மின்னல் பார்த்து பார்த்தும்,
உன் கண்ணில் தேனே தோற்கிறேன்,
நெஞ்சில் மேகம் கோர்க்கும்,
உன் நெஞ்சை மீனாய் ஏற்கிறேன்.
வண்ண வண்ண பூவாய்,
உன் சேலை சேர்ந்தே சேர்கிறேன்,
சின்ன வண்ண நூலாய்,
உன் ஆடையெங்கும் பாய்கிறேன்.
தென்றல் தாண்டி தீண்டும்,
உன் நேசம் வீழுமா,
காதல் காவலான என் காதும்,
உன் குரல் தாண்டி கேட்டுமா.
கடிகாரம் கதை சொல்லும்,
நம் காதல் ஏற்குமா,
விதி மாறும் வதை சேரும்,
நம் காதல் தோற்குமா.
உறைந்தேனே வரைந்தேனே,
காதல் போதையில்.
என் இனிப்பு கேசரியே
ஏதோ செய்து விட்டாய் என்னை,
கண்கள் சலிக்காமல் தேடுதுன்னை,
வார்த்தை வம்படிக்கிறது உன்னோடு பேசயென்னை,
மனம் மணக்க மறியலிடுகிறது உன்னை,
சித்தன் போக்கே சிறப்பெனயெண்ணியது சாகடிக்கிறதென்னை,
எழுதுகோல் ஓயாமல் எழுதுச் சொல்லுதுன்னை.
சாக்கு சொல்லி சாகடிக்க தேடினேன் குறை,
காணும் திசையெல்லாம் நிறைத்துள்ளாய் நிறை,
என் கனவில்,என் வாழ்வில்,என் உலகில்,
அறிவுச் சுடராக,அழகுத் தேவதையாக,
ஆனந்த நீரோடையாக,
இனிக்கும் கசப்பாக,
ஈதலின் இலக்கணமாக,
உந்துச் சக்தியாக,
ஊக்க மருந்தாக,
எழுத்தின் அகராதியாக,
ஏமாற்றத்தின் எதிர்வினையாக,
ஐயத்தின் ஐயமாக,
ஒளியின் உருவாக,
ஓசையற்றயென் ஒலிப்பெரு
என் இனிப்பு கேசரியே
ஏதோ செய்து விட்டாய் என்னை,
கண்கள் சலிக்காமல் தேடுதுன்னை,
வார்த்தை வம்படிக்கிறது உன்னோடு பேசயென்னை,
மனம் மணக்க மறியலிடுகிறது உன்னை,
சித்தன் போக்கே சிறப்பெனயெண்ணியது சாகடிக்கிறதென்னை,
எழுதுகோல் ஓயாமல் எழுதுச் சொல்லுதுன்னை.
சாக்கு சொல்லி சாகடிக்க தேடினேன் குறை,
காணும் திசையெல்லாம் நிறைத்துள்ளாய் நிறை,
என் கனவில்,என் வாழ்வில்,என் உலகில்,
அறிவுச் சுடராக,அழகுத் தேவதையாக,
ஆனந்த நீரோடையாக,
இனிக்கும் கசப்பாக,
ஈதலின் இலக்கணமாக,
உந்துச் சக்தியாக,
ஊக்க மருந்தாக,
எழுத்தின் அகராதியாக,
ஏமாற்றத்தின் எதிர்வினையாக,
ஐயத்தின் ஐயமாக,
ஒளியின் உருவாக,
ஓசையற்றயென் ஒலிப்பெரு