நிலா வந்ததே

மின்னல் பார்த்து பார்த்தும்,
உன் கண்ணில் தேனே தோற்கிறேன்,
நெஞ்சில் மேகம் கோர்க்கும்,
உன் நெஞ்சை மீனாய் ஏற்கிறேன்.

வண்ண வண்ண பூவாய்,
உன் சேலை சேர்ந்தே சேர்கிறேன்,
சின்ன வண்ண நூலாய்,
உன் ஆடையெங்கும் பாய்கிறேன்.

தென்றல் தாண்டி தீண்டும்,
உன் நேசம் வீழுமா,
காதல் காவலான என் காதும்,
உன் குரல் தாண்டி கேட்டுமா.

கடிகாரம் கதை சொல்லும்,
நம் காதல் ஏற்குமா,
விதி மாறும் வதை சேரும்,
நம் காதல் தோற்குமா.

உறைந்தேனே வரைந்தேனே,
காதல் போதையில்.

எழுதியவர் : ஜே.பெலிக்ஸ் ஜேசுதாஸ் (24-May-19, 1:12 pm)
சேர்த்தது : Felix Jesudoss
Tanglish : nila vanthathe
பார்வை : 295

மேலே