செல்ல சசக்குட்டி

பனையொலை மாளிகையில்,
பழஞ்சோறு நீயூட்ட
பச்சமொளகா நாங்கடிக்க,
போதுமென நானும்
போதாதென நீயும்
போடும் சண்டையில்,
மாமர மஞ்சம் மயங்கா கிளிகள்,
மயங்கும் மாகாதல் வெள்ளத்தில்.

கன்னுக்குட்டி உன் சேல கடிக்க,
பூனக்குட்டி உம்முந்தான இழுக்க,
நா வேணுமா, அவன் வேணுமா
பஞ்சாயத்து, எமை பட்டினியில் தள்ளும். மா
மாவென கொஞ்சி, கெஞ்சி முடியும்,
காதல் கோகில முத்து மிளிரும்.

எழுதியவர் : ஜே.பெலிக்ஸ் ஜேசுதாஸ் (27-Jun-19, 5:05 pm)
சேர்த்தது : Felix Jesudoss
பார்வை : 189

மேலே