என் முதல் கவிதை

என் இனிப்பு கேசரியே

ஏதோ செய்து விட்டாய் என்னை,
கண்கள் சலிக்காமல் தேடுதுன்னை,
வார்த்தை வம்படிக்கிறது உன்னோடு பேசயென்னை,
மனம் மணக்க மறியலிடுகிறது உன்னை,
சித்தன் போக்கே சிறப்பெனயெண்ணியது சாகடிக்கிறதென்னை,
எழுதுகோல் ஓயாமல் எழுதுச் சொல்லுதுன்னை.

சாக்கு சொல்லி சாகடிக்க தேடினேன் குறை,
காணும் திசையெல்லாம் நிறைத்துள்ளாய் நிறை,
என் கனவில்,என் வாழ்வில்,என் உலகில்,
அறிவுச் சுடராக,அழகுத் தேவதையாக,
ஆனந்த நீரோடையாக,
இனிக்கும் கசப்பாக,
ஈதலின் இலக்கணமாக,
உந்துச் சக்தியாக,
ஊக்க மருந்தாக,
எழுத்தின் அகராதியாக,
ஏமாற்றத்தின் எதிர்வினையாக,
ஐயத்தின் ஐயமாக,
ஒளியின் உருவாக,
ஓசையற்றயென் ஒலிப்பெருக்கியாக,
ஔவையின் மறுபிறவியாக,
மகிழ்ச்சிக் கடலில் தள்ளி விட்டாய்,
மானுருவ சிங்கமே மயக்கி விட்டாய்,
வேட்டையாடி சொர்கச் சிறையில் தள்ளிவிட்டாய்,
சோராமல் சேர்ந்திருக்க சித்தம் செய்துவிட்டாய்,
தேவியுனை சேர தேதியும் தேட வைத்துவிட்டாய்,
சாக்கேது சொல்வேன் சோம் பப்படியே-என்
சந்ததியின் சகாப்தமாகி விட்டாய்.

- ஜே.பெலிக்ஸ் ஜேசுதாஸ்

எழுதியவர் : ஜே.பெலிக்ஸ் ஜேசுதாஸ் (19-Apr-19, 6:57 pm)
சேர்த்தது : Felix Jesudoss
பார்வை : 425

மேலே