தங்கத் தமிழ்..........

உரமாய் உயிராய் .....
உடல் நரம்பில் ஓடும்
குருதியில் உயிர் காற்றாய்
இருந்த தமிழ் .........

அணுவாய் ! அணுவின் ஆற்றலாய்
புவியெங்கும் நிறைந்த தமிழ்...........
வீரமாய் ! வீரத்தின் விலை நிலமாய்
போராடிய தமிழ்.........

போராளிக்கு புதுப் பாதையை
காட்டி புரட்சி செய்த.....
புதுமைத் தமிழ்...........

கற்பாய்! கற்பின் உற்றாய்
வெடிமருந்தாய்...........
வெடித்த தமிழ்.....................

சொல்லாய் சொல்லின்
அழகாய் சுடர்விட்ட தமிழ்........
தமிழனின் நெஞ்சில் கனல்
மூட்டிய தமிழ்...........

தேனினும் இனிய தமிழ் .....
தெவிட்டா நல் அமுது தமிழ்.....
மாந்தர் மனது தளர்ந்த போது
தன்னம்பிக்கை ஊட்டிய
தங்கத் தமிழ் வாழியவே .................!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (7-Sep-11, 5:57 am)
பார்வை : 699

மேலே