அவளின் மூக்கு நீண்டிருந்தது,
என்னவென்று தெரியவில்லை....,
சென்றுவிட்ட இரவில்
எனக்கும் அவளுக்கும் நிகழ்த்த
கலவரத்தில்
அவளின் மூக்கு நீண்டு விட்டது......,
என்னின்
ஒவ்வொரு காரியங்களும்
நானறியாமல்
தணிக்கை செய்யப்பட்டன ......,
என்னின் சட்டை
பூக்களின் நெடிக்காய்....,
முகநூல் பதிவுகள்....,
சிணுங்கியபோதெல்லாம் என் கைபேசி.....,
எனக்கும் அவளுக்கும் இடையில் இடைவெளிகள் நிறைந்திருந்தபோதும்
அவளுடைய நீண்ட மூக்கு என்னை துளைத்துக்கொண்டிருந்தது
இருந்தும் அவளின் நீண்ட மூக்கு அவளுக்கு அழகாய் இருந்தது