கிடைத்திடுமோ நிம்மதி

முல்லைப் பூ வாங்கப் போனேன்
மணவறையில் சூட //
முகம் மறைத்த படி ஓடி வந்தேன்
விழிகளில் நீர் ஓட//

பட்டாடை எடுத்து வைத்தேன்
மேனியை மூட //
தொட்டுக் களைய துணையில்லை
உள்ளத்திலே வேதனை வேகமாய்ப் பாட //

மஞ்சள் இட்ட வதனமும்
சோகத்தில் வாட/
வண்ணம் தீட்டிய இதழும்
சேர்ந்தே வாட/

துணைக்குத் துணையாய்
வந்திடுவேன் என்றவனோ
இன்னொரு பாதை தேட//
வேறு ஒருத்தியின் கழுத்திலே
பொன் தாலி கட்ட//

கண் எதிரே கண்ட கட்சியினாலே
என்னுயிர் ஊசல் ஆட//
இன்னும் எங்கே தான் நிம்மதியை
நான் தேட //

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (9-Jul-19, 6:15 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 172

மேலே