உன் முந்தானை

பெண்மை அழகானது

உன் முந்தானை இடுப்பில் உரசும்போது
கோபம்கொள்கிறேன் அதன்மேல் ஏனெனில்
அந்த இடம் எனக்கு மட்டும் தான் சொந்தம்

உன் கால்களில் தவழும் கொலுசு இசைமீட்டுகிறது
அதன் பாக்கியம் கண்டு பொறாமை கொள்கிறேன்

நீ வடித்த சாதம் கூட உன் நாவில் முத்தமிட
போட்டி போடுகிறது அதன் போராட்டத்தை கண்டு வியக்கிறேன்

நான் உன் காதல் நினைவுகளிலே நிலைத்து நிற்கிறேன்
முத்தமிட்டு இசைமீட்டி உறவாக்கிக்கொள்ள செவிசாய்ப்பாயா என்மேல் .....

எழுதியவர் : சங்கீத் ஜோனா (11-Jul-19, 11:48 am)
சேர்த்தது : sangeeth jona
Tanglish : un munthaanai
பார்வை : 387

மேலே