கல்யாணம்

யானைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
பூமியெல்லாம் கொண்டாட்டமாம்
டைனோசர் மேலே ஊர்கோலமாம்
குரங்கு ஆடும் புலியாட்டமாம்
ஆமை பாட்டுக் கச்சேரியாம்
எலி இளவரசியின் வரவேற்பாம்

தாலிகட்டும் வேளையிலே
பெரிய தாலி வரவில்லையாம்
யானைப் பொண்ணு அழுதிடுச்சாம்
பூனை மாப்பிள்ளை வருந்திடுச்சாம்
பூக்களை எல்லாம் பறித்துவந்து
பூத்தாலி ஒன்று செஞ்சிடுச்சாம்

பார்த்துவிட்ட பெண்ணின் வீட்டார்
செமையாய் கைத் தட்டினராம்
புத்திசாலி பூனை மாப்பிள்ளைக்கு
பெண்ணைக் கொடுப்பதில் மகிழ்ந்தனராம்
கலக்கலாய் நடந்தது திருமணமாம்
காடெங்கும் கேட்டது வெடிச்சத்தமாம்..

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (13-Jul-19, 11:23 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 1742

மேலே