நண்பனுக்காக
நண்பா
நாளும் உன்னை நினைக்கிறேன்
உன் இழ(ற)ப்பை எண்ணி
வருந்துகிறேன்
மன வருத்தத்தால்
விழியோரம்
சில முத்துத்துளிகள்
எட்டிப்பார்க்கின்றது இறந்த உன் உடலை கண்டு
யாருக்குத்தான் தெரியும்
நாம் சுற்றிய
இடங்களின் எண்ணிக்கை
எவருக்கு புரியும்
நம் நட்பின் ஆழம்
கவலைகளுக்கு எல்லாம்
பாடம் கற்றுக்கொடுத்தாய்
இனிமை என்னவென்று
துன்பமாய் இருந்த பொழுதில்
இன்பம் கொட்டி முழக்கினாய்
தவறுகள் இழைத்தது
நீயானாலும் நானானாலும்
மன்னிப்புக் கேட்கும்
உன்னதமான உள்ளம்
உன்னுடையதே
உன்னுடன் வாழ்ந்த
காலம் கொஞ்சம்தான்
இனியும் வேண்டும்
எண்ணுகின்றது
என் நெஞ்சம்தான்
உன்னுயிரை பிரித்து
கடவுள் செய்தது வஞ்சம்தான்
உடலும் உயிருமாய்
இருந்தோம் எமன் கொண்டு
உயிர் போனதால்
வெற்றுடல் பெற்றேன்
கிளையும் இலையுமாய்
இருந்தோம் இறப்பெனும்
புயல் வீசியதால்
தனிக்கிளை ஆனேன்
நாம் செய்த சேட்டையால்
குறும்புத்தனத்தால்
கிடைத்த தண்டனைகளால
மனதிற்கு இன்பம்
கொடுத்தவர்களுக்கோ
பெருதத துன்பம்
என்னுடன் நீயிருந்தாய்
பிரிக்க முடியாத
நட்பினை தந்தாய்
பிரிக்க முயன்றவர்களை
வென்று
நட்பின் ஆழத்தை
புரிய வைத்தாய்
எத்தனை பேரை
சந்தித்தாலும்
ஞாபகம் இருப்பதில்லை
உன்னிடம் ஒரு கணம்தான்
பேசியிருப்பேன் ஆதலால்
ஏறபட்ட நட்பு
நேற்றுவரை
இன்று
ஈசல் உயிரியை போல்
அற்ப ஆயுளில் பறந்தவிட்டது
இனிமேல்
யாரிடம் பேசிடுவேன்
கவலைகளை பகிர்ந்துக்கொள்வேன்
நேற்று இருந்தவனாக
இன்று இறந்தவனாகிவிட்டாயே
மடிந்த காரணத்தை
கூறியிருந்தால்
மரணத்தை
தள்ளி வைத்திருப்பேன்
உன்னிடம் பேசி
அதையும் மீறி
நடந்திருந்தால்
கெஞ்சி கேட்டிருப்பேன்
இறைவனிடம் யாசி
என்னுயிரெடுத்து
இன்னொருயிர் காத்தருளுக என்று
கூற தவறவிட்டாய்
வார்த்தையில்
கூறினாய் நீயெழுதிய
கடிதத்தில்
படித்துப்பார்த்தேன்
கலங்கிப்போனேன்
எழுதிய வார்த்தைகளால்
கையில் பிடித்த
கடிதத்தில் இல்லை
என் மனதில்
உண்டானது புதியோர் சுமை
அந்த நிமிடம் வரை
நினைத்தேன்
உனக்கினியவன்
நானென்று
இல்லையென்று
தெரிந்துக் கொண்டேன்
கடிதத்தை பாரத்த பின்பு
காதலை கூறினேன்
அவள் மறுத்துவிட்டாள்
என்னை முழுவதுமாக
வெறுத்துவிட்டாளென
உன்னுயிரை
நீயே பறித்துக்கொண்டாய்
பலமுறை ஆறுதல்
கூறிய நீ
இன்று உனக்கு
நான் ஆறுதல்
கூறுவதற்கு முன்பே
விண்ணாளச் சென்றுவிட்டாய்
இம்மண்ணுலகிலே
எங்களை தவிக்கவிட்டு
வேதனையில்
வாடச்செய்துவிட்டாய்
மறுத்த காதலியின்
மறுபக்கம்
தெரியாமலேயே
மடிந்துவிட்டாயே
வேடிக்கையாக கூறியதை
வேதனையாக கொண்டு
வாழ்வை முடித்துவிட்டாயே
உண்மையில் காதலித்தாள்
உன் காதலி
சொல்ல நினைத்தாள்
தன் காதலை
உன் பிறந்தநாளில்
இன்றோ
கேட்டுக்கொண்டு இருக்கிறாய்
உன் இறந்தநாளில்
மறுஜென்மம் கிடைத்தால்
மறுபடியும் பிறப்போம்
நீயும் நானும்
நண்பர்களாக
இன்றும் என்றும்
எங்கள் மனதில்
வாடாமல் மலர்ந்திருப்பாய்
இக்கவிதையாக
நாளும் உன்னை நினைக்கிறேன்
உன் இழ(ற)ப்பை எண்ணி
வருந்துகிறேன்
மன வருத்தத்தால்
விழியோரம்
சில முத்துத்துளிகள்
எட்டிப்பார்க்கின்றது இறந்த உன் உடலை கண்டு
யாருக்குத்தான் தெரியும்
நாம் சுற்றிய
இடங்களின் எண்ணிக்கை
எவருக்கு புரியும்
நம் நட்பின் ஆழம்
கவலைகளுக்கு எல்லாம்
பாடம் கற்றுக்கொடுத்தாய்
இனிமை என்னவென்று
துன்பமாய் இருந்த பொழுதில்
இன்பம் கொட்டி முழக்கினாய்
தவறுகள் இழைத்தது
நீயானாலும் நானானாலும்
மன்னிப்புக் கேட்கும்
உன்னதமான உள்ளம்
உன்னுடையதே
உன்னுடன் வாழ்ந்த
காலம் கொஞ்சம்தான்
இனியும் வேண்டும்
எண்ணுகின்றது
என் நெஞ்சம்தான்
உன்னுயிரை பிரித்து
கடவுள் செய்தது வஞ்சம்தான்
உடலும் உயிருமாய்
இருந்தோம் எமன் கொண்டு
உயிர் போனதால்
வெற்றுடல் பெற்றேன்
கிளையும் இலையுமாய்
இருந்தோம் இறப்பெனும்
புயல் வீசியதால்
தனிக்கிளை ஆனேன்
நாம் செய்த சேட்டையால்
குறும்புத்தனத்தால்
கிடைத்த தண்டனைகளால
மனதிற்கு இன்பம்
கொடுத்தவர்களுக்கோ
பெருதத துன்பம்
என்னுடன் நீயிருந்தாய்
பிரிக்க முடியாத
நட்பினை தந்தாய்
பிரிக்க முயன்றவர்களை
வென்று
நட்பின் ஆழத்தை
புரிய வைத்தாய்
எத்தனை பேரை
சந்தித்தாலும்
ஞாபகம் இருப்பதில்லை
உன்னிடம் ஒரு கணம்தான்
பேசியிருப்பேன் ஆதலால்
ஏறபட்ட நட்பு
நேற்றுவரை
இன்று
ஈசல் உயிரியை போல்
அற்ப ஆயுளில் பறந்தவிட்டது
இனிமேல்
யாரிடம் பேசிடுவேன்
கவலைகளை பகிர்ந்துக்கொள்வேன்
நேற்று இருந்தவனாக
இன்று இறந்தவனாகிவிட்டாயே
மடிந்த காரணத்தை
கூறியிருந்தால்
மரணத்தை
தள்ளி வைத்திருப்பேன்
உன்னிடம் பேசி
அதையும் மீறி
நடந்திருந்தால்
கெஞ்சி கேட்டிருப்பேன்
இறைவனிடம் யாசி
என்னுயிரெடுத்து
இன்னொருயிர் காத்தருளுக என்று
கூற தவறவிட்டாய்
வார்த்தையில்
கூறினாய் நீயெழுதிய
கடிதத்தில்
படித்துப்பார்த்தேன்
கலங்கிப்போனேன்
எழுதிய வார்த்தைகளால்
கையில் பிடித்த
கடிதத்தில் இல்லை
என் மனதில்
உண்டானது புதியோர் சுமை
அந்த நிமிடம் வரை
நினைத்தேன்
உனக்கினியவன்
நானென்று
இல்லையென்று
தெரிந்துக் கொண்டேன்
கடிதத்தை பாரத்த பின்பு
காதலை கூறினேன்
அவள் மறுத்துவிட்டாள்
என்னை முழுவதுமாக
வெறுத்துவிட்டாளென
உன்னுயிரை
நீயே பறித்துக்கொண்டாய்
பலமுறை ஆறுதல்
கூறிய நீ
இன்று உனக்கு
நான் ஆறுதல்
கூறுவதற்கு முன்பே
விண்ணாளச் சென்றுவிட்டாய்
இம்மண்ணுலகிலே
எங்களை தவிக்கவிட்டு
வேதனையில்
வாடச்செய்துவிட்டாய்
மறுத்த காதலியின்
மறுபக்கம்
தெரியாமலேயே
மடிந்துவிட்டாயே
வேடிக்கையாக கூறியதை
வேதனையாக கொண்டு
வாழ்வை முடித்துவிட்டாயே
உண்மையில் காதலித்தாள்
உன் காதலி
சொல்ல நினைத்தாள்
தன் காதலை
உன் பிறந்தநாளில்
இன்றோ
கேட்டுக்கொண்டு இருக்கிறாய்
உன் இறந்தநாளில்
மறுஜென்மம் கிடைத்தால்
மறுபடியும் பிறப்போம்
நீயும் நானும்
நண்பர்களாக
இன்றும் என்றும்
எங்கள் மனதில்
வாடாமல் மலர்ந்திருப்பாய்
இக்கவிதையாக