நட்பு

துயில் களைய கனவும் மறையும்
கனவில் கண்டதெல்லாமும் நினைவில்
தாங்காமல் போகலாம் ஆனால் கனவிலும்
வரும் உன் நினைவுகள் மறையாது என் மனதில்
வடிவெடுத்து நிற்கிறதே நண்பனே இதுதானோ
தூய நட்பின் மாயம் ...ஆம் என்பேன் நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Jul-19, 12:19 pm)
Tanglish : natpu
பார்வை : 560

மேலே