பொய். உண்மை. கலாச்சாரம் ....?

அன்று நீரில் விழுந்த இலையின்
மௌன சலனத்தை உணர்வதற்குள் -
மீண்டும் ஒரு இலை விழுந்துவிட்டது .
அது பேரிடியென ..
இலையின் புணர்வென ..
என்னுள் இறங்கிவிட்டது .
எனது அண்டத்தை அசைய வைத்த ஆரவாரம் அது .காற்றோடு கலந்து விட்ட மாயமென
கரைந்து போனது எனது ஆண்மை ..
புணர்வதற்கு இனி ஏதுமில்லை .
சூத்திரம் பயில இனி அந்த இலையும் இல்லை .
அது இலையாகவும் இல்லை இப்பொழுது .
கடுவுளின் சயனமானது
அந்த இலையோடு முடிந்துவிட்டது .
இனி அவரும் கைகளையே துணை கொள்வார்.
அது தவறில்லை அவர் பிறந்த உண்மை
அவர் அறியாமல் இருபது தவறே ஆகும் .
தீண்டப்படும் விரல்களில் மறைந்திருக்கும்
காரணம் போல - அந்த
இலை மறைந்த காரணமும்
ஏதோ ஒரு முழுமையே ஆகும் .
அது கடவுளும் சாத்தானும்
கொண்ட உறவே ஆகும் .
ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது
நிராகரிக்கப்பட்ட - அத்தனை
உறவிலும் மறைந்துள்ளது
பல பொய்களும் ..
சில உண்மைகளும் ..
எவனோ கிறுக்கிய கலாச்சாரமும் ..

எழுதியவர் : (7-Sep-11, 1:45 pm)
சேர்த்தது : vikki prasanna
பார்வை : 233

மேலே