காதல்
பள்ளிப் பருவமுதல் ஒருவரை ஒருவர்
அறிந்திருந்தோம் தோழமைப் பூண்டோம்
பள்ளிப்படிப்பு முடிந்து பள்ளியைவிட்டு
வெளியேறி வேறு வேறாய் பிரிந்தோம்
பிரிந்தவர் மீண்டும் சந்தித்தோம் -இப்போதும்
எங்கள் தோழமையில் தொய்வேதும் இல்லை
இந்த சந்திப்பு நீண்டு ஒரு புதிய உறவைத்
தந்தது, நாங்கள் காதலராகிவிட்டோம்
எங்களை பிணைத்தது அந்த பள்ளிப்பருவ
தோழமையே …..கள்ளம் ஏதுமிலா நட்பு
நட்பே காதலாய் மாறியது