நிலா காயும் இரவினிலே - 2

பாகம் - 2 :

ஏய் எல்லாரும் வாங்கடி., எல்லாம் எப்படி இருக்கீங்க என்று புன்னகையோடு ஒவ்வொருவராய் தழுவி நின்றாள் காயத்திரி. நாங்க இருக்கிறது சரி, நீ அலைபேசியும் கையுமா நாங்க வாரத கூட கவனிக்காம உட்காந்திருக்க என்றாள் நீலவேணி. காயத்திரி பேசுவதற்கு முன் என்ன காயூ ம்..ம்..ம் ஆகட்டும் ஆகட்டும் என்று தொடர்ந்தாள் மலர்விழி. ச்சீ சும்மா இருடி என்றாள் காயத்திரி.

கல்யாண கலை வேற முகத்துல தாண்டவம் ஆடுது என்றாள் நீலவேணி. இப்ப கூட நேரா மாப்பிள்ளை வீட்டுக்குத்தான் போயிட்டு வாறோம் என்று அமுதா கூற, ஏன்டி வீடு தெரியலனா எங்கிட்ட கேட்க வேண்டியது தானே என்றாள் காயத்திரி. ஆமாம் நீ தான் காதுல வச்ச அலைபேசியைக் கீழே வைக்கவே இல்லையே அப்பறம் எப்படி உங்கிட்ட கேட்கிறது என்றாள் மகிழினி. சரி சரி வாங்க என்று தங்கும் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

அம்மா... அம்மா... என்று காயத்திரி கூச்சலிட, ஏன்டி இப்படி கத்துற என்று மகிழினி கேட்டாள். நீங்க வந்திருக்கிறத அம்மா அப்பாக்கிட்ட சொல்லுறதுக்குத் தான் என்றாள். அவங்க ரெண்டு பேரையும் கீழே பார்த்திட்டு தான் வாறோம் என்று மலர்விழி கூற, உன்னை மட்டுந்தான் பார்க்க முடியல என்று கேலியாக சொன்னாள் அமுதா. ரொம்ப கிண்டல் பண்ணாதங்கடி கல்யாணப் பொண்ண என்றாள் நீலவேணி. என்னடி நாலு பேரும் சேர்ந்து ரொம்ப ஓட்டுறீங்க என்றாள் காயத்திரி. இப்படி கொஞ்சி சிரிச்சி பேசிக்கிட்டு இருந்தனர் அந்த இளம் பூக்கள். அவர்களின் பேச்சொலிகளும் சிரிப்போசைகளும் அந்த இடத்தில் புது மணத்தை வீசிக் கொண்டிருந்தது.

இந்த அறையில தங்கிக்கிருங்கடா என்றான் அரவிந்தன். எல்லோரும் உட்காந்து பேசிக் கொண்டிருக்கையில் எங்கடா அவன்
உங்கக்கூட வரலையா என்று கேட்டான் அரவிந்தன். யாருடா என்று மணி திரும்ப கேட்டான். வேற யாரு நம்ம முகில் தான் என்று தேவா சொல்ல, அவன் இன்னும் வரலையா என்று கேசவன் இடை மறித்தான். வந்தா ஏன்டா அவன் மேல கோவம் எனக்கு என்றான் அரவிந்தன். முகில் எங்களுக்கு முன்னடியே கிளம்பிட்டான்டா, அதுக்கப்பறம் தான் நாங்க வந்தாம் என்றான் கேசவன்.

இன்னும் வரலையடா...என்று அரவிந்தன் கூற, எங்க போய் தொலைஞ்சானு தெரியலையே என்று மணி கூற, அலைபேசியையும் எடுக்க மாட்டங்கிறான்டா என்று தேவா சொன்னான். முகிலன்னு பேரு வச்சவங்க எல்லாம் திடீர் திடீருனு காணாமா போயிறாங்கடா, இந்த நாட்டுல என்ன நடக்குதுனே தெரிய மாட்டங்குதுடா என்றான் கேசவன். எப்படா குதிச்ச என்று சிரித்துக் கொண்டே தேவா கேட்க, எதுலடா என்று திரும்ப கேட்க, டேய் அவன் அரசியல சொல்லுறாண்டா என்று மணியும் அரவிந்தனும் கூறினர். ஏன்டா வாயைத் தெறந்தாலே அரசியலுனா, அப்ப நாங்க பேசவே கூடாதடா என்றான் கேசவன்.

டேய் ஏன்டா எங்கெங்கேயோ?... போறீங்க முகில பத்தி யோசிங்கடா என்றான் அரவிந்தன். நான் அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்டா, ரீங்காரம் போயிட்டே இருக்கு எடுக்க மாட்டேங்கிறான்டா என்றான் தேவா. நானும் முயற்சித்தேன் ஆனா அவன் எடுக்கலடா என்றான் அரவிந்தன். கவலைப் படாதிங்கடா, எப்படியும் கடைசில வந்துடுவான்டா என்று கேசவன் இழுக்க, இடையில் டேய் என்று மணி தடுக்க, கல்யாணத்துக்கு என்று கேசவன் முடித்தான். உன்னை திருத்தவே முடியாதுடா என்று சொல்லி வெளியேறினான் அரவிந்தன்.

எங்கே அந்த முகில் ?...

தொடரும்...

எழுதியவர் : இதயம் விஜய் (16-Jul-19, 5:44 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 176

மேலே