நிலா காயும் இரவினிலே - 1

பாகம் - 1 :

இளங்கதிர் உதித்துச் சற்று மேலெழும்பும் வேளையில் பசும்புல் வெளிகளில், மலர்களில் உறங்கும் பனித்துளிகள் எங்கோ?... வேலைக்குச் செல்ல தொடங்குகிறது. இரவின் குளிர் மெல்ல மெல்ல குறைந்து, இளந்தென்றல் வீதிகளில் உலாவ, இதமான சூடு இதயத்தைத் தழுவி அணைத்துக் கொள்கிறது.

பூமாலைத் தோரணங்கள், அலங்கார விளக்குகள், வாசலில் வண்ணப் பூக்களின் மணம் வீசி அசைந்து கொண்டிருக்கும் பூஞ்செடி கொடிகளோடு ஒரு திருவிழா கோலத்தில் அரண்மனை போன்ற அந்தப் பெரிய மாடிவீடு காட்சியளிக்கிறது. நாற்பது நாற்பத்தைந்து வயது உடைய தோற்றத்தில் இராசேந்திரன், கல்யாணி என்ற தம்பதிகள் இருவரின் மேற்பார்வையில் எல்லோரும் பரப்பரப்பாக அங்கு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு வெள்ளை நிற (டொயோட்டா) வாகனம் உள்ளே நுழைகிறது.
அதிலிருந்து மூன்று இளம் ஆடவர்கள் இறங்கி வர, இராசேந்திரன் கல்யாணி இருவரும் புன்னகையோடு அவர்களை வரவேற்கின்றனர்.

வணக்கம்மா., வாங்கப்பா வாங்க., எல்லாரும் எப்படி இருக்கீங்க., ம்ம்..நல்லா இருக்கோம்ப்பா என்று சிரித்த முகத்தோடு மூவரும் பதிலளித்தார்கள். அரவிந்தா டேய் அரவிந்தா., என்னம்மா., இங்கே வாடா உன் நண்பர்கள் வந்திருக்காங்க., டேய் வாங்கடா வாங்கடா என்று வீட்டுக்குள்ளிருந்து அரவிந்தன் வெளிவந்தான். அம்மா, அப்பா... இவன் கேசவன், இது தேவா, அது மணிகண்டன் என்று அறிமுகம் செய்து வைத்தான்.

என்ன கல்யாண மாப்பிள்ளை ஆள வெளியில பார்க்கவே முடியாது போல., இல்லடா.. உள்ள சின்ன வேலையாய் இருந்தேன். சிறிது நேரம் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கையில்., டேய் வெளியிலேயே நிக்க வச்சுப் பேசிக்கிட்டு இருக்காம உள்ளே அழைச்சிட்டுப் போட என்று கல்யாணி கூறினாள். இந்தா போறேன்மா., சரி வாங்கடா உள்ளே போவோம்.

அரவிந்தனின் அலைபேசியில் ரீங்காரம் ஒலித்தது., அதுக்குள்ளே யாருடா அது என்றான் கேசவன். வேற யாரு கல்யாணப் பொண்ணாத்தான் இருக்கும் என்றான் மணி. காயத்திரிடா, ஒரு நிமிடண்டா வந்துடுறேன் என்று சொல்லி கொஞ்சம் தள்ளிச் சென்று பேச ஆரம்பித்தான்.

அரவி.,.. ம்.. சொல்லு காயூ., என்ன எதும் வேலையாய் இருக்கியா என்றாள். இல்லையே... ஏன் எதாச்சும் வேணுமா என்றான். அதெல்லாம் ஒன்னுமில்ல அம்மா கூப்புடுறாங்க திரும்ப பேசுறேணு சொன்னியே மறந்திட்டியா என்றாள். அய்யோ!.. மன்னிச்சுக்க காயூ, என் நண்பர்கள் எல்லாம் வந்தாங்களா, அவங்ககிட்ட பேசிட்டு இருந்தனா அதான் மறந்திட்டேன்.

இப்பவே... இப்படினா கல்யாணத்துக்கு அப்பறம் சுத்தமா மறந்திடுவ போல என்று ஊடலாக பேசினாள். என்ன காயூ இப்படி சொல்லுற, நீ அலைபேசியில் கூப்புட்டதும் அவங்கள நிக்க வச்சிட்டு உங்கிட்ட பேசிட்டு இருக்கேன். ஏய்.. ஏய்.. சும்மா சொன்னேன் அரவி. அங்க வந்திருக்கவுங்கள முதல கவனி அரவி நான் உங்கிட்ட அப்பறம் பேசுறேன். ஏய் காயத்திரி எப்படிடீ இருக்க என்ற குரல்கள் கேட்டதும் யாரு உன் தோழிகளா என்றான் அரவிந்தன். ஆமாம் அரவி, சரி சரி நான் அப்பறம் பேசுறேன்.

டேய் என்னடா இவன் நம்மள இப்படியே நிக்க வச்சிட்டு அவன் பாட்டுக்கும் பேசிட்டு இருக்கான் என்று கேசவன் கூற, கல்யாணம் ஆகப் போகுதுல அதான் என்று தேவா கூறினான். இந்தா வந்திட்டேன்டா என்று சொல்லிக் கொண்டே அரவிந்தன் நெருங்கினான். எவ்வளவு நேரம்டா பேசுவே என்று தேவா கேட்க, ஓ.. இதான் நீ சொன்ன வேலையாய் என்று கேசவன் சொல்ல மூவரும் கிண்டலாய்ச் சிரித்தனர். சும்மா இருங்கடா, வாங்க உள்ளே போவோம் என்று மாடியை நோக்கி அழைத்துச் சென்றான்.

தொடரும்...

எழுதியவர் : இதயம் விஜய் (16-Jul-19, 5:40 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 162

மேலே