நிலா காயும் இரவினிலே - 3

பாகம் - 3 :

உச்சி வானைத் தாண்டி பாதி மேற்கு நோக்கி சூரியன் சாயத் தொடங்க,
நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆங்காங்கே ஒன்றிரண்டு மரங்கள் அசைந்து இலேசாக சூடான காற்றை வீச, கண்ணுக்கெட்டும் தொலைவில் ஒரு சிகப்பு வண்ணத் திறந்த ஜீப் வந்து கொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல விழிப் பார்வைக்குள் நெருங்க அதில் ஒரு இளைஞன் வருவது தெரிகிறது. இன்னும் பக்கத்தில் நெருங்கும் போது அவனின் தோற்றம் இலைமறை காய் போன்றும் சற்றுத் தெளிவாகவும் புலப்படுகிறது.

நீல நிற வன் முழுகால் சட்டையும்(ஜீன்ஸ்) வெள்ளை நிற கொசுவு சட்டையும்(டி செர்ட்) அணிந்திருக்க வாகனத்தை ஓட்டி வருகிறான். ஒரு அஞ்சரை அடிக்குமேல் உயரம் இருக்கக்கூடும். அந்த உயரத்திற்கு ஏற்ற எடையும், உடற்பயிற்சி செய்து வைத்திருக்கும் கட்டான உடலும் கம்பீரமானத் தோற்றத்தைக் கொடுக்கிறது.

காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் வாகனத்தில் அதிக நீளமும் இல்லாத குறைவும் இல்லாத அவன் தலைமுடி முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் நாணல்களைப் போல் அசைந்தாடுகிறது. மழைத்துளி நிலத்திற்குள் இறங்கிய ரெண்டு நாட்களில், நீரைத் தந்த மேகத்தைத் தலைநீட்டி எட்டிப் பார்க்கும் பசும்புல்லைப் போல சவரம் செய்த முகத்தில் தாடியும் மீசையுமிருக்க, காலை சூரியன் போல் இருவிழியும் ஒளி கொடுக்க, ஆண்களே பார்த்து வியக்கும் ஆணழகைக் கொண்டிருந்தான் முகில் என்ற முகிலன்.

தன் தொடையில் தாளம் போட்டவாரே வாகனத்தை ஓட்ட, திடீரென்று என்ன நினைத்தானோ?... தெரியவில்லை. பையுக்குள் கைவிட்டு அலைபேசியை எடுத்துத் தொடுதிரையைத் திறந்தான். தவறிய அழைப்புகள் ஏராளமாய் இருந்தது. அரவிந்தனிடம் இருந்து வந்த அதிக அழைப்புகளைப் பார்த்ததும், அவனைத் தொடர்பு கொண்டான். ஆனால் அரவிந்தன் எடுக்கவில்லை. அடுத்துக் கேசவன், மணி, தேவா என்று ஒவ்வொரு வரையும் தொடர்பு கொண்டான். ஆனாலும் பயனில்லை. ஒருவேளை நான், அவர்கள் தொடர்பு கொள்ளும் போது எடுக்காததால் இப்ப எவனும் எடுக்காம இருக்குறாங்கைளோ?... என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

மீண்டும் அரவிந்தனைத் தொடர்பு கொள்ள எடுக்கவில்லை. இம்முறை நீண்ட நேர ரீங்காரத்திற்குப் பின் அலைபேசியைத் தூக்கக் கலக்கத்தில் எடுத்து ஹலோ என்று கேட்டான். ஏன்டா எவனும் தொடர்பு கொண்டால் எடுக்க மாட்டங்கிறீங்க என்றான் முகில். டேய் முகில் நீயாடா, எல்லாம் தூங்கிக்கிட்டு இருக்கோம்டா. என்னடா பகலையே தூக்கம் வேண்டிருக்கு என்றான் முகில். இரவு கிளம்பி காலையில தாண்டா வந்து சேர்ந்தோம். ஆமாம் நீ எங்க இருக்க, வாறேன்னு சொல்லிட்டு இன்னும் வராம எங்கடா இருக்கே என்று கேட்டான் கேசவன்.

அங்கதாண்டா வந்திட்டே இருக்கேன் என்று முகில் சொல்ல, நேத்தையிலிருந்தாடா வந்திட்டே இருக்கே என்றான் கேசவன். இன்னைக்கு ஒரு ஒன்பது மணிக்குள்ள வந்துடுவேண்டா, ஆமாம் அரவிந்தன் பக்கத்துல இருக்கானா என்றான் முகில். இல்லடா, அவன் உன் மேல செம காண்டுல இருக்கான் என்று கேசவன் பதில் சொல்ல, சரி அவன் கிட்ட அலைபேசியைக் கொண்டு போய் கொடு நான் பேசுறேன் என்று முகில் சொன்னான். நீ அப்படியே காத்திரு நான் போய் கொடுக்கிறேன்.

ஒவ்வொரு அறையாய்த் தேடி பார்த்தால் அரவிந்தனைக் காணவில்லை. கீழே சென்று பார்த்தால் அங்குமில்லை. டேய் முகில் அவனக் காணோம்டா என்று சொல்லிக் கொண்டே தன்னோட அறைக்குள் நுழைய, அரவிந்தன் மற்ற நண்பர்கள் மூவருடனும் பேசிட்டு இருந்தான். டேய் எங்கடா போன, இவ்வளவு நேரம் ஒன்னத்தான் தேடிட்டு இருந்தேன் என்று அரவிந்தனைப் பார்த்துக் கேசவன் கேட்டான். டேய்... டேய்... என்று முகில் சத்தம் போட்டுக் கொண்டே இருக்க, இந்தாடா முகில் பேசுறான் என்று அலைபேசியை நீட்டியதும் வாங்கிப் பேசினான் அரவிந்தன்.

இப்பதான் உனக்கு எங்க ஞாபகம் வந்துச்சடா என்று கொஞ்சம் கோபத்தோடு அரவிந்தன் பேச, டேய்... ஒரு சின்ன பிரச்சனையால வாறதுக்குக் கொஞ்சம் தாமதம் ஆச்சுடா என்றான் முகில். சரி சரி இப்ப நீ எங்க இருக்கே என்று இவன் கேட்க, அங்கதாண்டா வந்திட்டு இருக்கேன், எப்படியும் ஒரு ஒன்பது மணிக்குள்ள வந்துடுவேண்டா என்று முகில் பதில் சொன்னான். அம்மாவும் அப்பாவும் ஒன்ன இன்னும் வரலையானு கேட்டாங்கடா, இதோ வந்திட்டே இருக்கேனு சொல்லிடுடா அரவிந்தா என்று சொல்லி அலைபேசியின் தொடர்பைத் துண்டித்தான்.

இந்தப் பக்கம் மூன்று பேரும் தங்களுக்குள் பேசி சிரிச்சிக்கிட்டு இருந்தனர். ஆமாம் நீ எங்கடா போன இந்த வீடு முழுசும் தேடினேன். அப்பா அம்மாக்கிட்டேயும் கேட்டேன் தெரியலனு சொன்னாங்க என்று அரவிந்தனைப் பார்த்துக் கேசவன் கேட்டான். காயத்திரியைப் பார்க்க போனேன்டா என்று பதில் சொன்னான். கல்யாணத்துக்கு அப்பறம் பார்த்திட்டு தானே இருக்க போறே என்று தேவா முடிப்பதற்குள், டேய்... காயத்திரியோட தோழிகள அறிமுகப் படுத்தி வைக்க கூப்பிட்டாடா அதான்டா போனேன் என்று முடித்தான் அரவிந்தன்.

என்னாடா இவன் இப்படி சுயநலவாதியா இருக்கான் என்று மணி சொல்ல, ஆமான்டா பொண்ணுங்கள பார்த்தாலே சில பேர் இப்படி ஆகிடு வாங்கடா என்று கேசவனும் சொன்னான். ஆமான்டா இது ரொம்ப ரொம்ப தப்புடா என்று மணி சொன்னான். டேய்... நான் உங்கள கூப்புட வந்தேன்டா, ஆனால் எல்லாரும் தூங்கிட்டு இருந்தீங்களா அதான் தொந்தரவு பண்ணாம போயிட்டேன் என்றான் அரவிந்தன். தொந்தரவு பண்ண கூடாதுனு போனியா இல்ல, இவங்கை வந்தா தொந்தரவுனு போனியா என்று கேசவன் சொல்ல மணியும் தேவாவும் சேர்ந்து சிரித்தனர். டேய்... நான் என்ன அப்படி பட்ட ஆளாடா என்று கேட்டான் அரவிந்தன். இந்தமாரி விசயத்துல யாரையும் நம்ம முடியுமா என்று தேவா சொல்ல, ஆமாம் ஆமாம் என்று மணியும் சொன்னான்.

இப்ப சொல்லு எங்கள எப்ப கூட்டிட்டுப் போய் அறிமுகப் படுத்தி வைக்கப் போற என்று கேசவன் கேட்க, நாங்கெல்லாம் கல்யாணத்துக்கும் கோயிலுக்கும் போறதே பொண்ணுங்கள பார்க்கதான்டா என்றான் மணி. சின்ன வாய்ப்புக் கிடைச்சிட கூடாதே எல்லாரையும் உங்க பாதையில இழுத்துட்டுப் போயிடுவீங்களே என்று கேசவனையும் மணியையும் பார்த்து தேவா சொன்னான். எங்க அந்த நல்லவன் முகத்த காமிங்க பார்ப்போம் என்று மூன்று பேரும் தோவாவைக் கிண்டல் செய்தனர். சரி சரி எப்ப அந்த வீட்டுக்குப் போப்போறோம் என்றான் தேவா. ஒரு ஆறு மணிக்கு மேலே அழைச்சிட்டுப் போறேன்டா என்றான் அரவிந்தன்.


தொடரும்...

எழுதியவர் : இதயம் விஜய் (17-Jul-19, 7:33 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 247

மேலே