முதுமொழிக் காஞ்சி 84
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பிணிகிடந் தோன்பெற்ற வின்பநல் கூர்ந்தன்று. 4
- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும் காமவின்பம் வறுமையுறும்.
'உடம்பை யுடையா னுகக்கும்' -பிரதி பேதம்.
வியாதியடைந்து மெலிந்த சரீரத்தை யுடையவன் நுகரும் காமவின்பம் வறுமையுடையதாம். உடல் நலத்தைக் கெடுக்கும். உயிரையும் மாய்க்கும்.
நோயாளி நுகரும் காமவின்பம் கேட்டைத் தருவதாம்.