முதுமொழிக் காஞ்சி 85

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
தற்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று. 5

- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், தன்மேல் அன்புள்ளவனாய்த் தன்னை ஒருவன் பாதுகாவாத விடத்து பிணக்குதல் வறுமையுடையதாம்.

அன்புடையார்மேல் பிணக்கங் கொண்டால் அவர் பரிகாரம் செய்வர்: அன்பிலார்மேல் கொண்டால் அவர் பரிகாரம் செய்யார். ஆதலால் அப்பிணக்கு ஒருவருக்குக் கேட்டை உண்டாக்கும்.

அன்புடையாரிடம் கொண்ட புலவியால் இன்பம் சிறக்கும்; அன்பிலாரிடம் அதனால் இன்பம் சிறவாது.

நீரும் நிழல தினிதே புலவியும்,
வீழுநர் கண்ணே இனிது. 1309 புலவி, என்று கொள்வதுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-19, 10:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே