முதுமொழிக் காஞ்சி 86
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முதிர்வுடை யோன்மேனி யணிநல்கூர்ந்த தன்று. 6
- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், மூத்த உடம்பினை யுடையான் அணியுமணி வறுமையுறும்.
கிழப்பருவமடைந்தவன் உடம்பில் அணியும் ஆபரணம் அழகு செய்யாது.
யௌவனர் அணியும் ஆபரணம் செய்கையழகைத் தந்து சிறக்கும்: வயோதிகர் அணியும் ஆபரணம், சிறவாமல் விகாரத்தை உண்டாக்கும்.