முதுமொழிக் காஞ்சி 87
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
சொற்செல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று. 7
- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், தன்சொல் செல்லாத விடத்து நாம் ஒன்றைச் சொல்லுதல் பயனற்றதாகும்.
சொற் செல்லாவழி - தன்சொல்லை ஏற்பாரில்லாத விடத்து.
தன்வார்த்தையை மதியாதவரிடம் சொல்லிக் கொண்ட குறை பயன்படாது என்பதாம்.