புத்தகத்திலும் இடம் பிடித்திடு

அடுத்தடுத்து வரும்
சவால்களை வென்றுவிடு./
அதற்கு உன்னுள் எழும்
முன் கோபத்தைக் கொன்று விடு/

அதிர வைக்கும்
சோதனைகளையும் /
எதிரும் புதிருமாக வரும்
எதிரிகளையும் /
அறிவால் வென்று விடு. /
அதற்கு உரியவனாக
உன்னை மாற்றி விடு ./

வெற்றிப் பாதையை
விரைவாகத் தேடி விடு. /
பணத்தை விரையமாக்காது
திருந்தி விடு /

மனதில் உறுதியை பதியமிடு. /
தோல்விகளைக் கண்டு /
ஏங்காது கலங்காது அடுத்த
படியை நோக்கி விடு ./

சிறு சிறு தொல்லைகளை
முறியடித்திடு./
அதற்கு முற்போக்கு
சிந்தனையை வளர்த்திடு ./

புதிய சரித்திரம் படைத்திடு. /
சாதனைப் புத்தகத்திலும்
இடம் பிடித்திடு ../

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (21-Jul-19, 11:48 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 116

மேலே