தென்னிந்திய யாத்திரை

'கோடீஸ்வரர்'

கொடுத்த நூறு ரூபாயில்
மூன்று தேநீர் வாங்கி வந்த
உதவிக்கு நிற்கும் பையனின்
நேர்மை புரிந்தது அவன் என்னிடம்
நீட்டிய மீதி இருபது ரூபாய் தாளில் ...!

தினம் தினம் என் இல்லத்து
ஞானமூர்த்தீஸ்வரர் முத்தரமம்மன்
பதம் பணியும் பொழுது
அச்சிலை வாங்கிய
மீதி பணத்தை வைத்திருக்க மறுத்த
சிறு பெட்டிக்கடையம்மாவின்
பேராசைப்படாத மனமே
என் கண்முன் தோன்றுகின்றது...!

என் வீட்டின் செல்ல கண்ணனின் தம்பி
முருகனிடம் நித்தமும்
வணக்கம் வைக்கும் பொழுது
நாணயம் தவறாத
சிலை விற்கும் வியாபாரி ஞாபகம்வர
பெருமாளையல்லவா அவராக முன்வந்து
எனக்கு விலை குறைத்து தந்து
என்றும் கடனாளியாகினார் ...!

பிராமணருக்கு தானம் செய்வதில்
ஈடுபாடற்ற எனக்கு
தென்னிந்திய தலங்களில் சந்தித்த
பிராமணர் மீது இனம்புரியாத பரிதாபம்
சிறு தொகை கிடைத்த திருப்தியில்
அவர்கள் தலையால் செய்யும் பரிகாரம்
கல்நெஞ்சையும் கரையவைக்கும்...!

சந்தித்தேன் சில மனிதரை மனத்தால் கோடீஸ்வரரை .....!


~ நியதி ~

எழுதியவர் : நியதி (21-Jul-19, 1:42 am)
பார்வை : 65

மேலே