நற்புலவன்
கவிபாடும் நற்புலவன் பாடும் பாட்டில்
கற்பனையில் கொஞ்சம் அதீதம் காட்டி
பொய்யிலே பிறந்தவனா இப்புலவன் என்ற
பெயர் வாங்கலாம், ஆயின் அவன் ஒரு போதும்
மாண்பிலா மக்கள் மீது துதி பாடிட மாட்டான்
அது பெருஞ்செல்வமே தந்திடும் என்றபோதும்