என் அன்பு தம்பி
என் உயிர் தம்பியே
நான் இருந்தேன் உன்னை நம்பியே
குளிர் காட்டில் பிறந்து
பல சுமைகளை சுமந்து
சந்தோசங்களை கடந்து
சுடுகாட்டில் வந்து விழுந்தாயே
காதல் என்னும் நோயால்
காய்ந்து போன செடியை போல
வாழ்கையை துலைத்து
உன் உயிரையும் இழந்து
பிறப்பின் விடை தெரியாமல்
முதுமையை பார்க்க முடியாமல்
மண்ணுக்குள் புதைந்தாயே