ஏய் கருவாச்சியே
ஏய் கறுவாச்சியே
நீயும் எனை சாச்சியே
தேவதையை போல
எனக்கு நீ வாச்சியே
கண்ணில்யேன் இந்த கலக்கம்
வாழ்க்கை எப்போது உதிக்கும்
துயரம் எப்போது விலகும்
மனதின் பாரம் எப்போது குறையும்
பாலைவனம் போல என் வாழ்க்கை
நீ என் அருகில் இருந்தால்
சோலைவணமாக மாறும்
பால் நிறம் கொண்ட அந்த நிலவை
கரு மேகம் கொண்டு மறைக்கும்
தென்றல் சென்று அதை விடுவிக்கும்
ஓ காதலி
கண்ணில் நீர் துளி
மௌனம் ஒன்றே தான்
என் வலியின் நிவாரணி
கண்கள் இரண்டுமே
ஒன்றாய் நோக்குமே
காதல் மலர்ந்தால் இதயம் இணையுமே
பாசம் மாறலாம்
பழக்கம் மாறலாம்
காதல் வலிமட்டும்
என்றும் மாறாதது
கோயில் கோபுரம்
கலசம் போலவே
நம் காதல் நினைவுகள்
பல்லாண்டு நிலைக்குமே