அவனை தேடி

எந்த ஊரு பொண்ணுமா
இங்க வந்து குந்துமா
உன்னை தொட்டத்து யாரம்ம
தில்லுஇருந்த கூரம்ம

பாரிவாக்கம் பொண்ணுங்க
நான் சொல்லுறத கேளுங்க
பாசம் வைத்த ஆளுங்க
அவன் இந்த ஊரு தானுங்க
ஆசை வார்த்தை கூறி
என்னை ஆக்கி விட்டான் தாய்
இதோ வரேன்னு கூறி
பல மாசம் இங்க ஆகி
முகநூலில் கண்டேன்
அவன் அருகில் தேவி
அங்கே கடுப்பாகி
இங்கே வந்தேன் அவனை தேடி

இருக்கும் இடம் தெரியாமல் அலைகிறேன்
பார்க்கும் இடம் எல்லாம் அவனை நினைக்கிறேன்
குழந்தையிடம் கூட கேட்கிறேன்
பதில் கிடைக்காமல் குழம்பி நிற்கிறேன்

எழுதியவர் : கணேசன் நயினார் (23-Jul-19, 3:38 pm)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : avanai thedi
பார்வை : 293

மேலே