இங்கு வந்து என் பிறந்தாய்

பசுமை வயல் பரப்பிலே
பாமர வசிக்கும் மண்ணிலே
திறந்தவெளி குடிசையிலே
ஒத்தை தென்னை நிழலிலே
கொட்டும் மழை சாரலிலே
ஒதுங்க இடமும் இல்லயே
உன்ன ஒழிக்க வழியும் இல்லயே

பனைமரத்து ஓலை கூட
பதனி குடிக்க உதவுமே
இந்த. பாவபட்ட பிறப்பு கூட
என்ன இப்ப ஏசுமே

ஆசபட்டு ரெண்டு பேரும்
செய்த தவறு என்னவோ
இங்கு வந்து நீ விழுந்து
போராடுவது என்னவோ

யேங்கி யேங்கி பசியை ஆற்ற
நீ அழைப்பதென்னவோ
மார்பில் உள்ள பால் உரைந்து
நான் துடிப்பதென்னவோ

குருவி கூட வீட்டை கட்டி
தன் குஞ்சை கூட காக்குதே
பசியும் கூட அடங்காமல்
என் குழந்தை இப்ப வாடுதே

கள்ளிப்பால குடுத்து உன்ன
கொல்ல கூட நினைசேனே
பாவிமாக உன் சிரிப்பா பார்த்து
பாதை மாறி வந்தேனே

தொப்புள்கொடி பாசம் இன்னும்
என்ன விட்டு போலியே
தொட்டவனும் இப்ப என் கண்
முன்னாடி இல்லயே

பத்து மாசம் உன சுமந்து பெத்த
வலியும் இப்ப இல்லயே
பாவிமக உன் பசிய அடக்க
எந்த வழியும் தோனல

வாய கட்டி வயித்த கட்டி
என்ன பெற்ற அன்னையே
உன் வாசலிலே வைக்கிறேன்
நானும் பெற்ற பிள்ளையே

நீ விடுத்த சாபம் என்னவோ
எனக்கு பழித்து விட்டதே
நான் விதைத்த விதையும்
இப்ப உன் வாசலிலே கிடக்குதே

பச்சை உடம்புகாரியாக இந்த
மண்ணை விட்டு போகிறேன்
பாசம் மட்டும் மிச்சம் வெச்சி
தூக்கில் தொங்க போகிறேன்

என்னைப்போல நீயும்
இந்த மண்ணில் வாழ்ந்து போகாதே
எந்த நிலையிலும் என் தாயின்
பேச்சை மீராதே

போய் வரேன் என் செல்ல அன்பு பிறப்பே
போராடி வா அதுவே எனக்கு சிறப்பே

எழுதியவர் : கணேசன் நயினார் (25-Jul-19, 1:24 am)
சேர்த்தது : Ganesan Nainar
பார்வை : 102

மேலே