வாழ்க்கை புரிதல்

நீ ஒருவரை
இழந்ததால் வரும்
கண்ணீரை விட
நீ ஒருவரை
இழக்ககூடாது என்று
விடும் கண்ணீருக்கே
வலி அதிகம்
இதை உணர்ந்தவங்கலுக்கு
மட்டுமே புரியும்
அதன் வலியும்
வேதனையும்..

நம் கையில் உள்ள
விரல்கள் ஐந்தும்
ஒரே நிலையில் இல்லை
அதே விரல்களை
மடக்கி வைத்தால்
ஒரே நிலைபாட்டில் இருக்கும்
அதுபோலவே
வாழ்க்கையையும்
வளைந்து கொடுத்து
வாழ்ந்து பாரும்
இன்பம் மட்டுமே
வந்து சேரும்

எழுதியவர் : கணேசன் நயினார் (25-Jul-19, 2:24 am)
Tanglish : vaazhkkai purithal
பார்வை : 846

மேலே