கவிஞனே
#கவிஞனே உன்னைக்
கவிதையாக்கவா?
உன் அறிவுரையை அரிந்தெடுத்து /
நறுக்கன புகுத்தும்
சொல்லை நறுக்கிப் போட்டு /
உமது கருப்பொருள்
வார்த்தைகளைக் கலந்து விட்டு /
#கவிஞனே
உன்னைக் கவிதையாக்கவா?
துரு துரு வசனங்களைத்
துருவிப் போட்டு/
துடிப்பான
பேச்சுக்களை துண்டு போட்டு/
படிப் படியாக பலவற்றை
படிப்பிக்கும் யுத்தியையும் /
குற்றம் குறைகளைச் சுட்டிக் காட்டி/ கொந்தளிக்கும் குணத்தையும் /
தூவி விட்டு #கவிஞனே
உன்னைக் கவிதையாக்கவா?
விவாத
மேடையை உடைத்துப் போட்டு/
விரோதியை தூரத்தில் நிறுத்தி /
வீண் விவகாரத்தை /
கார சாரமான
பதில்களால் மிரட்டிப் போட்டு/
நொடிப் பொழுதும் அச்சம் இன்றி/
தன்னைத் தானே மெச்சிய படி /
வலம் வரும் #கவிஞனே
உன்னைக் கவிதையாக்கவா?
#ஓவியருக்கு -நன்றி