கம்ப நன்னாடன்

கம்பன் அவன் பெரிய கொம்பன்
சடையப்பனின் மனம் ஒத்தவன்
திருவெழுந்த ஊரில் தவழ்ந்தவன்
வடமொழியை அறிந்து செழித்தவன்
தமிழ் மூவேந்தர்களுக்கும் தெரிந்தவன்
சடையப்பனின் மனச்சாமியை போற்றவே
சல்லடையால் தமிழைச் சலித்து
சாக வார்த்தைகளால் அழகு காவியம்
இராம காதையை அகிலத்திற்கு வழங்கியவன்
வைணவர்களை வாதால் வென்று
வைரத் தமிழால் வேய்ந்த காதையை
திருவரங்க ஆயிரங்கால் மண்டபத்தில்
திரிச்சனம் தரித்தோர் திகைக்க திகைக்க
திருத்தேனை செவிகளில் செலுத்தி வென்றவன்
அம்பிகாபதிக்கு அப்பனாய் இருந்தாலும்
வெண்ணெய் நல்லூர் காளிக்கு மகனானவன்
வள்ளுவனைப் போன்றே இவனக்கும்
வாய்த்த பெயரே நிலையனது
உண்மை பெயர் யாதென்று தெரியாது யாருக்கும்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (26-Jul-19, 6:59 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 62

மேலே