அரிவாய் அரிவாய் அரியே

வரதர் வந்தார் வான்மழை பொழியட்டும்
பிரதர் வந்தார் ஒட்டுக் கேட்டு
கரத்தார் நீட்ட கைநிறைய நோட்டு
அறத்தால் ஆகுமோ அரசியல் இன்று
வராதா வருக்கிறாய் அத்தி மரத்தால்
வரதா வருவாய் சக்கரக் கரத்தோடு
மறத்தை அரிவாய் அரிவாய் அரியே !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jul-19, 8:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே