மழை காதல்
வெண்மேகம் தட்ட தட்ட
கருமேகம் முட்ட முட்ட
இடி போடும் சத்தம் கேட்குதே
கதிர் எல்லாம் ஆட்டம் ஆட
களைப்போடு தலையை சாய்க்க
மகிழ்வோடு விவசாயி வந்தானோ
காட்டாற்று வெள்ளத்தால்
நதி எல்லாம் நிரம்பியதே
நடு காட்டில் விட்டாலும்
அடங்காமல் ஒடியதே
மழையே மழையே
நீ இங்கு வருவதுயேன்
வான்மெகம் அனுப்பியதால்
நீ கண்ணீர் விடுவதுயேன்
பால்போன்ற தேகமது
பனி சிற்பம் போல வந்து
பழமாக ருசிக்க வைத்து
பழகாமல் போன தென்ன
கண்ணாடி முன்னின்று
கவிதைகளை நான் வரைந்தேன்
கனவு என்ற புத்தகத்தில்
உன் பெயரை நான் வரைந்தேன்