காதல் சின்னம்

அன்னை என்றாய்
தந்தை என்றாய்
அன்பே என்றாய்
என்னுயிரே என்றாய்
தோழன் நானடி என்றாய்
தோழில் சாய்ந்து கொள்ளடி என்றாய்
உன்னில் மூழ்கினேன்
என்னுள் உன்னைச் சுமந்தேன்
உயிர் மூச்சும் நீயானாய்
எல்லாம் எனக்கு நீயானாய்
இத்தனையும் எனக்குக் கொடுத்து சந்தோஷம் கொடுத்தேன் என்று உரைத்த நீயே
என்னை ஏமாற்றிச் சென்றதேனோ?
மனதால் உண்டான காயம் தீரும் முன்னே
அடிமேல் அடி கொடுத்து அவமான பரிசை கொடுத்ததேனோ?
இது நீ தந்த காதல் சின்னம் தானோ?

எழுதியவர் : அஸ்லா அலி (1-Aug-19, 1:17 pm)
சேர்த்தது : அஸ்லா அலி
Tanglish : kaadhal sinnam
பார்வை : 234

மேலே