தொலை தூரத்தில் நீ

கனவில் முகம் காட்டுகிறாய்/
நினைவில் காதல் பெருக்குகிறாய்/
கற்பனையில் கரம் கோர்க்கிறாய்/
நித்தமும் எனை அழைக்கிறாய் /

துயரத்தில் ஆதரவுக் குரல் கொடுக்கிறாய்/
தொலைபேசி உரையில் உரிமை அளிக்கிறாய் /
ஆழமான அன்பைத் தான்
நீ தொடுக்கிறாய்/
ஆழ் கடல் கடந்து மறைவாகவே இருக்கிறாய்/

மாய உலகினிலே உன்னில்
நான் இணைகின்றேன் /
தொடும் விரலுக்குத்
துணையில்லை/
தொலை தூரத்தில் நீ/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (1-Aug-19, 1:20 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 259

மேலே