நீ தலைவராக முடியாதுய்யா

தலைவரே உங்களப் பாக்க ஆந்தையூரில் இருந்து ஒரு தொண்டர் உங்கள பாக்க வந்திருக்கிறாருங்க.
@@@@@
வரச்சொல்லுய்யா.
@@@@@@
வணக்கம் தலைவரே.
@@@@@@
வாய்யா நல்லமுத்து. வீட்டில எல்லாம் நலமா?
@@@@@@
அய்யா, அய்யா, இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி என்னோட பெண் குழந்தைக்கு தமிழ்கனின்னு பேரு வச்சீங்க. அப்பதான் நான் உங்களப் பக்கத்திலிருந்து பாத்தேன். உங்களோட பேசி எம் பேரச் சொன்னேன். நீங்க எம்பேரை இன்னும் ஞாபகம் வச்சிருக்கிறீங்க.
@@@@@@
சரி நீ வந்த விசயத்தை சொல்லுய்யா நல்லமுத்து.
@@@@@
அய்யா நான் விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து நம்ம கட்சியில தீவிரத் தொண்டனா இருக்கிறேன். எனக்கு எங்க ஆந்தையூர் வட்டத் தலைவர் பதவிக்கு என்ன நியமனம் செய்யுங்க.
@@@@@
நம்ம கட்சி விதிப்படி தலைவர் பதவிக்கு வர ஒருவரோட தகுதி நாலு பேரு திடீர் தாக்குதல் நடத்துனாக்கூட அதை சமாளித்து அவர்களை விரட்டியடிக்கிற அளவுக்கு உடல் வலிமை இருக்கணும். நீ நோஞ்சானா இருக்கிற.அதுதான் யோசிக்கிறேன்.
@@@@@@
அய்யா எனக்கு மனவலிமை இருக்குதுங்க. எதா இருந்தாலும் சமாளிப்பேனுங்க.
@@@@@@
அது போதாது நல்ல முத்து. உடல் வலிமை மிகவும் முக்கியம். சரி உன்னை ஆந்தையூர் வட்ட நமது கட்சி ஆலோசகரா உன்னை நியமிக்கிறேன். உங்க வட்டத் தலைவர் தங்கசாமிக்கு நீ தான் ஆலோசகர். கட்சியல நிறைய உறுப்பினர்கள சேத்துங்க. 2021 சட்டமன்றத் தேர்ததலில் ஆந்தையூர் தொகுதி வேட்பாளர் வாய்ப்பை உனக்குத் தர்றேன்.
@@###
எனக்கு இது போதுங்க அய்யா. நான் வர்றேனுங்க.
@@@@
சரி போயிட்டு வாய்யா நல்லமுத்து.

எழுதியவர் : மலர் (7-Aug-19, 8:34 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 176

மேலே