கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 1

சூரியன் மறையும் நேரம் நெருங்கி கொண்டிருந்தது. வானத்தில் செம்மஞ்சலுடன் ஆரஞ்சு கலந்த வண்ணத்தை கதிர் வீச்சுகளாய் படர விட்டிருந்தான் கதிரவன். சுளீர் என சுடும், கண் கூசும் வெயில்.

அட்லஸ் அவன் வீட்டு பால்கனியில் கையில் ஒரு டி கப்பை ஏந்தியவாறு வானத்திலிருந்த கதிரவனை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தான். இதமான நல்ல காற்று வேறு. இயற்கையை ரசித்ததவன் நேரம் போவது தெரியாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.

அட்லஸின் முதுகுக்கு பின்னாலிருந்து அழகான இருக் கைகள் அவன் நெஞ்சின் முன் ஊடுருவி இறுக்கமாக அவனைக் கட்டியணைத்து கொண்டது. அட்லஸ் அக்கரங்களை பற்றி தன் உதட்டால் முத்தமிட்டான்.

இது அட்லஸ்ஸா? இல்லே, வருணா? என சிரித்தவாறே அவன் கைகளைப் பற்றிக் கொண்டே அவன் முன் வந்து நின்றாள் சுஜி.

இந்த கேள்வியே தப்புங்க... என அட்லஸ் சொல்லும் போதே, குறிக்கிட்டாள் சுஜி,

ஐயையோ... இது சத்தியமா வருண் தான். வருண் தான் அட்வைஸ் பண்ணி சாகடிப்பான். அட்லஸ் அப்டிலாம் பண்ணவே மாட்டான், என சிரித்தாள்.

அப்புறம், வருண் என்னங்க பண்ணுவான் ? எனக் கேட்டு தள்ளி நின்றிருந்தவளை எட்டிப் பிடித்து இடையை இழுத்தான்.

இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்தது. நெஞ்சமும் படபடத்தது. சுஜியின் முகத்தில் படர்ந்திருந்த கூந்தலை தன் விரல்களால் நகர்த்திய அட்லஸ் ,

ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் உன்னாலே
ஆழம் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே,

இந்த உலகம் தூலாய் உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில் உன்னை கரைச் சேர்ப்பேன்,

எனப் பாடினான்.

அட்லஸ், இனிமையான குரல் கொண்டவன். சிட் ஸ்ரீ ராமை மிஞ்சிய குரல் என்றே சுஜி சொல்வாள். அவ்வளவு அருமையான குரல். கேட்பவர்களின் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பான்.

சுஜி விழுந்ததும் என்னவோ அவனது குரலுக்காகவே எனச் சொல்லலாம்.
அவனை எப்போதும் பாடச் சொல்லி சாகடிப்பாள். அவனும் பலமுறை அவளுக்காக சலிக்காமல் பாடுவான்.

ஏண்டா, நிறுத்திட்டே ? பாடு.

என்ன பாட ?

தாரமே பாட்டு, இப்போ பாடூனியே...

சுஜியைப் பார்த்து புன்னகைத்தவாறே பால்கனி கம்பியில் சாய்ந்துக் கொண்டு பாடினான் அட்லஸ்,

வேறெதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்,
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்,

உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்,
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்,

தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்,
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்,

பாடி முடித்தவனை வந்து கட்டிக் கொண்டாள் சுஜி.

இன்னிக்கி, இங்கையே தங்கிடவா ? என அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டே கேட்டவள் கேசத்தை கோதிக் கொண்டே சொன்னான் அட்லஸ்,

அட்லஸ் : பாப்பா, இது தப்புடி...

சுஜி : அதுலாம் ஒன்னும் இல்லே. வாய மூடு. என்ன கடுப்பாக்காதா.

அட்லஸ் : இல்லடி, பாப்பா.. நாம பண்றது தப்பு. அதுவும் நான் பண்றதுதான் ரொம்ப பெரிய தப்பு.

நெஞ்சில் சாய்ந்திருந்த சுஜி அவனை தள்ளி விட்டு பால்கனி சுவற்றில் சாய்ந்துக் கொண்டாள்.

அவனை பார்க்காமல் இருட்டிக் கொண்டிருக்கும் வானத்தை வெறித்து பார்த்து நின்றாள்.

அட்லஸ் அவள் அருகில் வந்து அவள் கைகளை பற்றினான். சுஜி அவன் கைகளை உதறி விட்டு தன் கைகளை கட்டிக் கொண்டாள்.

அட்லஸ் அவளின் முகத்தை தன் இருக் கைகளில் ஏந்தினான்.

அட்லஸ் : பாப்பா, நான் பண்ண தப்புலையே அழகான தப்பு நீதாண்டி.
என்னால, இப்போ சிரிக்கற நீ, கடைசி வரை சிரிக்க முடியாதுடி.

உனக்கு ஏண்டி, சொன்ன புரிய மாட்டுது. உன் 'ஹஸ்பண்ட்' தாண்டி நிஜம். நான் வெறும் நிழல் தான். நிஜம் இல்லே.

அவர் உன்ன அவ்ளோ லவ் பண்றாருடி. நீ அவர் கூட இருந்த சந்தோசமா இருப்ப... சொன்ன புரிஞ்சிக்கடி பாப்பா.

சுஜி : உனக்கு அவர் சந்தோசம் முக்கியம். எனக்கு நம்ப சந்தோசம் முக்கியம். அவ்ளோதான் !

அட்லஸ் : இல்ல பாப்பா, நாம பண்றது தப்பு, அட்லஸ் பேசி முடிக்கும் முன்னே,

சுஜி : ஒரு மண்ணும் கிடையாது ! என ஆத்திரத்தில் கத்தினாள் சுஜி.

அட்லஸின் முகத் தாடையை தன் விரல்களால் பிடித்துக் கொண்டு கேட்டாள்,

சுஜி : உனக்கு என்ன பிடிக்கலையா ?! சொல்லுடா உனக்கு என்ன பிடிக்கலையா ?!

பதில் சொல்லாமல் நின்றிந்த அட்லஸின் கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமே பதிலாய் வழிந்தது. அவளின் கூந்தலை வருடியவனின் கைகளை தட்டி விட்டு,

என்ன பார்த்த எப்படி இருக்கு ? நீ கூப்டா வரணும் நீ போன போனும் ? அதுக்கு பேரு என்ன தெரியுமா ?

கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிய குரல் தழு தழுத்த வாறே அட்லஸைப் பார்த்தாள் சுஜி.

பாப்பா ! ஆத்திரத்தில் கத்தினான் அட்லஸ்.

பத்து விநாடிகளுக்கும் மேற்பட்டு அங்கு அமைதி நிலவியது.

தொடரும்...

எழுதியவர் : தீப்சந்தினி (8-Aug-19, 4:35 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 421

மேலே