கழுத்தோடு கட்டியணைத்து

உன்னிலே என்னைத் தொலைத்தேன்
ஓயாமல் உன்னை நினைத்தேன்
பூவில் உள்ள வாசம் போலே
பொதிந்து போய் வாழ நினைத்தேன்

கழுத்தோடுக் கட்டியணைத்து
காதல் கதைப்பேசி காதில் முத்தமிட்டு
கவலை மறந்தே கனவுலகம் செல்ல
கவர்ச்சியாளைக் கைக்கொள்ளத் துடித்தேன்

பழஞ்சோறுக்கு சுவைச் சேர்க்கும்
மீன் குழம்பாய் அவளைச் சேர்த்து
அள்ளி உண்ணும் ஆவலில் துடித்தேன்
அதற்கான அற்புத நாளை அன்றாடம் பார்த்தேன்

அவளின் அழகில் மயங்கி அறிவில் சொக்கி
வரவை நோக்கி வாரம் பூராவும் அவளுக்காக
வலசைப் போகும் கொக்காய் விக்கித்திருந்தேன்
வஞ்சியவள் வலக்கண்ணால் சைகைச் செய்தாளே.....
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Aug-19, 9:06 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 374

மேலே