ஆனந்த மழையே
ஆகாயக் கங்கை அருகே வந்து /
நிறை மதியாய் அருவியெனப் பொங்கி/
வறண்ட நிலத்திலே ஓடிய ஓடமாய்/
வாடிய பயிரை வாரியணைத்த அன்னையாய் /
கோடி இன்பம் கொடுத்த மழையே /
செடி கொடி செழித்து வளர /
வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க/
விதையிட்ட விவசாயி மனம் குதுகளிக்க/
கருமேகக் கூட்டமாக உரு மாறி/
சிறு துளி மழையாகவே வந்திறங்கி/
ஏழை எங்களது நெஞ்சினில் இன்பம்/
கொடுத்து துன்பமதைத் துரத்திய மழையே/
குற்றால அருவியும் வற்றிய நிலையிலே /
மழையே நீ ஆனந்தம் தந்தாய்/
தாகம் தனிக்க உழவர் சோகமது /
பறக்க வைத்த ஆனந்த மழையே/