தற்பொழுது பெய்து கொண்டிருக்கும் மழை

தற்பொழுது பெய்து கொண்டிருக்கும் மழை !

கவிழ்த்து வைத்த
பாதி பந்தாய்
வானம் !
இப்பொழுது
மேகத்தின் முற்றுகையில்
சிக்கி தவிக்கிறது

கருமை படர்ந்த
மேகங்கள் வானத்தில்
மோதி சண்டையிட்டு
மின்னலையும் இடியையும்
தராமல் !

தன்னை கசக்கி
பிழிந்து மழையாய்
பொழிகிறது

இந்த மெளன மழை!
சிறு துளி துளியாய்
மண்ணுக்குள் ஆழமாய்
விழுந்து

இரண்டு மூன்று நாட்களாய்
மனதுக்கு ரம்யமாக
குளிர்ந்து இருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Aug-19, 12:21 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 297

மேலே