கலா விசு

கவிதை வானில்

விடுமுறையில்
செல்வது உலா
வானதில் பாருங்க
நிலா
வனத்தில் பாருங்க
பலா
மனதின் கீழே பாருங்க
விலா
எல்லோர் மனத்தில்
கைவைத்து பாருங்க
இருப்பாங்க கலா

இவர் கலா இல்ல
கவியுலக காலா
கல்லிலும் முள்ளிலும்
நடக்கும் தமிழன்னைக்கு
இவங்கதான் இருக்காங்க காலா

சோர் ஊட்ட நிலாவை
காட்டுங்க
கவிதை ஊட்ட
கலாவை காட்டுங்க

கலா
இந்த பேரை கேட்டதும்
பல பேருக்கு இருக்கு நலக்கலா
பல பேருக்கு பயத்தில் எடுக்கு விக்கலா
பலருக்கு இருக்கு சிக்கலா
தீயோர்க்கு இவர் முட்களா
கலா என்பது இரண்டெழுத்து
சொற்களா இல்லை
தமிழன்னை மட்டும்
இவர் பெயரைக் கேட்டால்
மயங்கி விழுவாள் சொக்கலா

கவி தைக்க இவரிடம் வா நில்
இதுதான் கவிதை வானில்

சம்சாரம் அது மின்சாரம்
அதன் டைரக்டர் விசு
ஆடிட்டர் விசு வின்
சம்சாரம் அது மின்சாரம்
அது கலாவிசு

அனைவருக்கும்
கவிதை கொடுத்த
தமிழன்னை
அதன் விதையை
உன்னிடம் தானே கொடுத்தாள்

உன்னிடம் கவி கற்றவர்கள்
கவிஞராகவில்லை
கவிதையானார்கள்

முருகன் மருத மலை மாமணி
எல்லோருக்கும்
விருது கொடுக்கும்
நீயே அடுத்த கலைமாமணி

கவிஞர் புதுவைக்குமார்

எழுதியவர் : குமார் (10-Aug-19, 2:17 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 136

மேலே