அவள்
நல்லவள் நல்லாள் வல்லவள் அவள், உடலைவிட்டு என்றும் இறங்காமல் அணிந்துவரும் அணிகலன் கற்பு
கற்பு ஒன்றே, அது அணையா விளக்காய்
அணிகலனாய் காக்கும் நெருப்பாய்
அணிந்திருக்க அவன் வந்தான் இவள்
அழகில் மயங்கி அழகிய உடல் கண்டு
அவளை வலிய வந்து தீண்ட பார்த்தான்; அவன் நகம் அவள் மீது பட்ட அக்கணமே
அவள் கற்பு ஜிவாலையாய் மாறியதோ! தீயவன் அவன் கரு நாகம் தீண்டியதொப்ப
துடி துடித்து விழுந்தான் மார்பைக் பிடித்துக்கொண்டே
உயிர்விட்டு விட்டான் என்ன நேர்ந்தது யாரும்
அறியார் ……. அவள் கற்பு அவளைக் காத்தது
சூறையாடவந்தவன் சூறையாடப் பட்டான்