கேளாய் கண்ணம்மா

கேளாய் கண்ணம்மா...!

உனது வடிவம் நெருப்பின் விம்பமடி கண்ணம்மா
ஆண்வர்க்கத்தையே அழிக்கும் காட்டுத்தீயாக இருந்த நீ
அறிவில் சுடராகவும் ஆண்வர்க்கத்துக்கு அன்னையாகவும்
உலகையே உன் அன்பால் கட்டி போடும் சக்தி கொண்டவளாகவும்
மாறுவது வாழ்க்கைச் சக்கரத்தில் நீ ஏற்கும் பாத்திரம் ;
பொறுமையில் பூமித்தாயாக அன்பெனும் வேதம் ஓதி
மனச்சுத்தமெனும் கற்பை பயின்று
பூச்சூடி மகிழ்கின்ற உன்னை
பெண்மனதை ரணமாக்கி சீரழிக்கும்
சந்தேகப் புத்தியெனும் "கொடிய நோய் " நெருங்கிட விடாதே கண்ணம்மா ...!
உன் குற்றமா என் குற்றமா யார நானும் குற்றம் சொல்ல ....?
ஏன் நீயும் இன்னொரு திரௌபதியாகின்றாய் ....?உன் மானம் காக்க கண்ணனைக் காணோமடி கண்ணம்மா ;
ஏன் நீயும் இன்னொரு சீதையாகின்றாய் ....? உன் ராமனுக்கு உன் மேல் நம்பிக்கை வரவில்லை சொல்லம்மா ;
ஏன் நீயும் இன்னொரு கண்ணகியாகின்றாய் ? உனக்காக மதுரை பற்றி எரியவில்லையடி ஏனம்மா ;
ஆண் துணையின் பிரிவிலிருந்தும் துரோகத்தில் இருந்தும் அடக்குமுறையிலிருந்தும்
வன்முறையிருந்தும் புத்துயிர் பெறும் நீ மனதில் உறுதி கொண்டு
தன்னம்பிக்கையுடன் நட்பை சுவாசித்து உறவுகளை நேசித்து
கல்வியில் சிறந்து ஆளுமை நிறைந்து கண்ணியமான ஆண்மை மதிக்கும்
அறிவுச் சுடரான புதுமைப் பெண்;
பாரம்பரியம் மாறாது வைராகியமான பெண்மையின் பண்புகள் மெருகேற
நீ உனது உள்உணர்வுகளுக்கு மதிப்பளித்து கால் மிதியாவதை தவிர்த்து
துன்பத்தையும் சாதகமாக்கி சிகரத்தை தொடவேண்டுமடி என் கண்ணம்மா!




~ நியதி ~

எழுதியவர் : niyathy (13-Aug-19, 7:45 pm)
Tanglish : keylaay kannamma
பார்வை : 100

மேலே