கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 3

குளித்து முடித்து கண்ணாடி முன் அமர்ந்து தன்னைத் தானே ரசித்துக் கொண்டு கைகளில் லோஷன் தடவிக் கொண்டிருந்த சுஜியை அவளின் கணவன் குமார் கட்டிலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

பாப்பா.. இப்பலாம் நீ ரொம்ப லேட்டா தூங்கறா? என்றவாறு அவளின் அருகில் வந்து அமர்ந்தான் குமார். அவளின் தோள் பட்டைகளில் முத்தம் வைத்தவனை சளித்துக் கொண்டு,

எனக்கு தூக்கம் வருது. ஆள விடுங்க என்றால் சுஜி.

குமாரும் ஒன்றும் பேசாமல் தூங்கப் போய் விட்டான்.

தூங்காமல் விழித்திருந்த சுஜி, அட்லஸின் அழைப்பிற்காக காத்திருந்தாள்.

அவனிடமிருந்து அழைப்பு வராததால், அவள் புரிந்துக் கொண்டால் அவன் ஜிம்முக்கு தான் சென்றிருப்பான் என்று.

சுஜி திறமையாக கவிதை எழுத கூடியவள். அட்லஸை நினைத்து கவிதை எழுதுவது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

அவன் வரும் வரையில் அவனுக்கான கவிதைகளை எழுதி அவனுக்கு அனுப்பி வைத்தாள். அட்லஸ் ஜிம்முக்கு செல்லும் போது வழக்கமாக கைத்தொலைப்பேசியை எடுத்த செல்ல மாட்டான்.

இதுப் போன்ற காத்திருப்பு சுஜிக்கு மிகவும் பிடிக்கும். அவன் ஜிம்மிலிருந்து திரும்பி வரும் வரை தூக்கத்தை கட்டுப் படுத்திக் கொண்டு அவனுக்காக காத்திருப்பாள்.

அட்லஸிடமிருந்து பதில் வந்ததும், உடனே அவனை அழைத்தாள் சுஜி வீடியோ பதிவில் இருவரும் உரையாடுவது வழக்கம்.

அழைத்தவுடனே இருவரும் போட்டி போட்டுக் கொண்டு முத்தம் கொடுப்பதே வழக்கம். அதை தாண்டி சுஜி எப்போதுமே அட்லஸை சிரிக்க சொல்லி பார்ப்பாள் இல்லையேல் அவன் பேசும் போது அவனையே பார்த்து ரசிப்பாள்.

அவள் கூந்தலை ஒரு புறமாக எடுத்து விடும் போது, அட்லஸ் எப்போதுமே சொல்வான்,

அட்லஸ்: ஐயோ, அப்படி செய்யாதடி.

சுஜி: ஏன் ?

அட்லஸ்: அழகா இருக்கடி.வேற லெவல்.நான் சொல்லக் கூடாதுதான், இருந்தும் சொல்றேன் ஐ லவ் யூ. ஐ ஹெட் யூ. நீ என்னமோ பண்றே என்னே .

சுஜி: என்னப் பண்ணேன் ?

அட்லஸ்: ஐ லவ் யூ...

சுஜி: செம்ம அடி வாங்க போறிங்க மிஸ்டர் அக்கீர்.

அக்கீர்: பார்டா. என்ன அக்கீர்னு கூப்பிடறத.

சுஜி: உன்னே எல்லாரும் அட்லஸ் கூப்பிடறாங்க. எனக்கு உன்ன அப்படி கூப்பிட பிடிக்கல. இனிமேல், நான் உன்ன அக்கீர்னு கூப்பிடவா.

அக்கீர்: என்னமோ, கூப்பிட்டு போ. ஐ லவ் யூ. மிஸ் யூ சோ மாச்.

சுஜி: அக்கீர், நம்ப உறவுக்கு என்ன பேரு? கள்ள காதலா?

அக்கீர்: சீ ! அப்டிலாம் தப்பா சொல்லாத கள்ள காதல் அது இதல்லாம் தப்பா சொல்லாத. லூசு லூசு லூசு.....

சுஜி:அப்போ நாம காதலர்களா?

அக்கீர்: ஆமாடி, காதலர்கள்தான். ஏனா, நீ இப்போ உன் ஹஸ்பண்ட லவ் பண்ணல.யாரவது ஒருத்தர் மேல தான் வரும். சோ, அது எம்மேல.

சுஜி: டேய், அழகா கொலு கொழுன்னு இருக்கடா.. உன்னே அப்டியே கடிக்கனும் போல இருக்கு. கரடி குட்டி....

அக்கீர்:எருமே, பேச்சு வாக்குல என்ன கரடி சொல்றே.. குரங்கு குரங்கு.

சுஜி:மம்மி கிட்ட பேசிட்டியா?

அக்கீர்: அச்சச்சோ, மறந்துட்டேண்டி.

சுஜி: ஆமா, இப்போதான் உனக்கு யார் ஞாபகமும் வர மாட்டுதே. எந்நேரமும் என் நெனப்புலே இருந்த இப்பிடித்தான். வேணி சேச்சிக்காவது கால் பண்ணீயா?

அக்கீர்: அதுவும் இல்லடி, அவளும் என்ன கொல்லப் போற.

சுஜி: டேய், எனக்கு தூக்கம் வருது. சீக்கிரமா என்ன 'டோடோ' பண்ணு.

அக்கீர்: 'டோடோலாம்' பண்ண முடியாது வேணும்னா 'டோடோல்' வாங்கி தரேன்..சாப்பிட்டு தூங்கு.

சுஜி: கொன்னுருவேண்டா உன்னே... சீக்கிரம் தூங்க வைடா.

சுஜி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அக்கீர் அவனது கைத்தொலைப்பேசியை தூரமாய் வைத்து அவனது கிட்டாரை கையில் எடுத்தான்.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சநை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

சுஜி : அக்கீர், ஐ லவ் யூ.

கண்களை மூடி அவள் உதடடை குவித்து அமர்ந்த இடத்திலிருந்தே அவனுக்கு முத்தம் தந்தாள்.

அக்கீர்: பாப்பா.. நான் தினமும் உன்ன இப்படியே தூங்க வைக்கவா?

சுஜி: தினமும்மா? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அட்லஸ். அதெல்லாம் முடியாது என சிரித்தாள்.

சிரித்த முகமாய் பாடிக் கொண்டிருந்த அக்கீர் அப்படியே அமைதியானான்.

சுஜி: டேய், சாரிடா பூனை குட்டி. இங்க பாரேன், நான் விளையாட்டுக்குத் தான் சொன்னேன். கோச்சிக்காதடா பிளீஸ். அட்லஸ் பிளீஸ்...சோரி சோரி அட்லஸ் இல்ல அக்கீர்.

அக்கீர்:

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ மோகமில்ல

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..

சுஜி: ஐ லவ் யூ சோ மாச் அக்கீர். எப்படா என்ன வந்து கூட்டிகிட்டு போக போறே...

அக்கீர்: சோரி, பாப்பா.

சுஜி: ஏய், என்னாச்சிடா?

அக்கீர்:உன்கூட பேசும் போதெல்லாம் நீ என்னா ரொம்ப யோசிக்க வைக்ககறா பாப்பா...

சுஜி: என்னன்னு?

அக்கீர்: நான் தப்பு பண்றேன் பாப்பா. இது சரி இல்லை. நீ கல்யாணம் ஆனா பொண்ணு. இதெல்லாம் சரியா வராது. இது சரியும் இல்லே. எல்லாம் தப்பு பாப்பா.

அக்கீர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனே ரிசீவரை வைத்து விட்டான்.

சுஜி மீண்டும் மீண்டும் அழைத்தும் கூட எடுக்கவே இல்லை.

அக்கீர் கண்களை மூடி படுத்துக் கொண்டான். அவனால் கண்களை மூட முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தது. என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற பயம் ஒன்று அவன் கண்களின் முன் வந்து நின்றது. அவனின் அம்மா முகம் அண்ணன் முகம் தான் எப்போதும் வரும் ஆனால், இம்முறை அவளின் முகம்; ஆம் சுஜியின் முகம் வந்து நின்றது. அவனால், அவளை அவன் யோசிப்பிலிருந்து எடுக்கவே இயலவில்லை.

இது சரியில்லை தவறு என்று மூளை சொன்னாலும். மனம் ஏற்க மறுத்தது. அருகிலிருந்த அலைபேசி வேறு அலரிக் கொண்டே இருந்தது. அவள் தான் அழைத்துக் கொண்டே இருந்தால் விடாமல். அக்கீர் போனை எடுக்காமல் பேசாமலேயே இருந்தான். அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.

இப்போது கோல் எடுக்கல வீட்டு முன்னுக்கு வந்து நிற்பேன் என.

அதை பார்த்த அக்கீர் சிரித்தான்.

அவளை யோசித்த வண்ணமே, ஓட்ஸ் கொஞ்சம் கலக்கி குடிக்கலாம் என்ற யோசனையில் கிட்சன் பக்கம் சென்றான். ஓட்ஸை தட்டில் வைக்க திடிரென்று தோன்றியது, அன்றொரு நாள் அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது இப்படித்தான் ஓட்ஸை பெரிய தட்டில் வைத்து சாப்பிட அவள் கிண்டலடித்தாள். அதனை சிறிய கப்பில் ஊற்றி சாப்பிட சொன்னாள்.

அதை நினைத்து சிரித்தவன், கையிலிருந்த கைப்பேசியை பார்த்தான். சுஜி இன்னமும் விடாமல் கோல் செய்துக் கொண்டே இருந்தாள். அவள் நிச்சயம் கதறி அழுவாள். அழுதிருப்பாள் என்பதும் அவனுக்கு தெரியும். இப்போது கோல் செய்தால் இன்னும் அதிகமாக ஆக்கோரோஷமாக மாறி விடுவாள் என்றும் அவனுக்கு தெரியும். ஆதலால், கொஞ்ச நேரம் போனை எடுக்காமல் இருப்போம் என இருந்தான்.

பால்கனிக்கு சென்றான். காதுகளில் ஹன்ட்ஸ் பிரியை மாட்டிக் கொண்டு கீத்தாரை கையில் எடுத்தான்.

மீண்டும் தொடர்ந்தான் அவனது விருப்ப பாடலை.

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

அவன் பாடி முடித்த போது, ஈரமான உதடொன்று அவனது உதட்டோடு ஒட்டியது. கண்களை திறந்தவன் கண் எதிரே இருந்த கண்களின் வழி அவனையே பார்த்தது.

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (15-Aug-19, 2:44 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 261

மேலே