ஒற்றை ரோஜா

ஒத்தையடிப் பாதை வழி
புத்தகம் சுமந்த படி
நான் போகையில் ஒற்றை மலரோடு
அத்தை மகன் வந்து நின்றான்.
தெத்துப் பல் தெரியும் வண்ணம்
புன்னகை புரிந்தான்.

கொத்தோடு முள் இருந்த.
ஒற்றை ரோஜா மலரைக் கொடுத்து
மொத்தமாக. என்னை
கொள்ளை கொண்டான்.
சின்ன ரோஜா மலர்
சுகந்தம் பரப்ப. மெல்லமாக.
என் சிவந்த. இதழ் இரண்டும்
சின்னதாய் முத்தம் பதிக்க

அப்போது மலர் கொடுத்து
ஆவலாக நோக்கிய
அத்தை மகன் வெட்கம் கொண்டான்
முத்தம் தன்னிடம் இருந்து
தவறியதால் துக்கம் கொண்டான்.
நான் மெதுவாக நகர்ந்தேன்
தலையை சாய்த்த வாறு

அடுக்கிய புத்தகம் நடுவே
ரோஜாவை மறைத்து வைத்து
மாந்தோப்பு வழியே நடந்தேன்.
நினைவுகள் பின் நோக்கியே சென்றது
அத்தை மகன் ஒற்றை மலரோடு
நின்ற காட்சி மீண்டும் கண்ணில் உதயமாச்சு.

உதிராத காதலுக்கு உதவிட வந்த. ஒற்றை மலரே
என் உதிரம் கொண்ட வண்ணத்தில்
எதிரே வந்த ரோஜா மலரே மலர்களின் ராஜா
என் ராஜன் கொடுத ஒற்றை மலரே
இன்று முதல் உமக்கு மெத்தை இட்டேன்
என் புத்தகம் நடுவே. ...//

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (16-Aug-19, 10:52 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : otrai roja
பார்வை : 102

மேலே