தேவதை

செவ்வந்தி இதழ் சுமந்த பெண்ணே.
சிக்கனம் இன்றி சிவந்த கண்ணே.
என்னை சிக்கனப் பிடித்து விட்டாயேடி
பெண்ணே அடி கண்ணே.
சிட்டாகப் பறக்கும் பெண்ணே நீ
சிக்கனமாகச் சிரிப்பதும் ஏனோ?
கண்ணே அடி பெண்ணே.
வெட்கத்தால் வேலி கட்டி நாணத்தால்
கதவு போட்டு நான் நுழைய முயலும்
போது தடை போடும் பெண்ணே.
உன் சின்ன முகம் பார்க்க ஏங்குதடி
என் க (ண்) ணே.
தூக்கணாங்குருவிக் கொண்டைக் காரி
உன்னைத் தூக்கி நான் ஆட அதைப்பார்த்து
ரசிக்கவே இந்த அருவியும் ஏங்குதடி.
கரையும் என் ஆசை எல்லாம்
தரை புரண்டு ஓடுதடி தலை தூக்கி
பாராமல் நீயும் தரை நோக்கி நகருவதும்
நியாயமோடி?
என் மனதை உன்னிடம் பம்பரமாக
சுத்த விட்டு பின் புரமாக நான் தொடரும்
வேளையிலே என் தொடைநடுங்கிப்
பயம் வந்து தொல்லை கொடுக்குதடி
வெட வெடத்துப் போன பாதம் இரண்டும்
வேண்டாம் என்று நடையை நிறுத்துதடி.
காதலில் விழுந்த என் மனம் கண்டு
அதிகமாகத் துடிக்கிறது இதயமடி
உனக்கு அருகதை அற்றவனாகப்
போனேனோ என்று நினைக்கையிலே
விழியிலும் அருவி பெருகுதடி.
நானும் உன்னைத் தொட்டு
நீயும் நாணம் விட்டு நாம்
என்ற மாலை கட்டி இன்பத் தேன்
சொட்டு சொட்டாக கொட்டப்
போவது எப்போ எப்போ..?
எப்போ ?எப்போ? என அதை
நினைத்து நினைத்து என்
நெஞ்சம் ஏங்குதடி பெண்ணே
அடி கண்ணே.........../////